பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99 கால்டுவெல்

கட்டினான். (இப்படி முயல், கருடன் போன்றவற்றின் விந்தைச் செயல்களைக் கொண்டு கோட்டை முதலியன அமைக்கப்பட்டன என்ற செய்திகளும் உண்டு. - ந.ச). கன்னடியன் அணைக்கட்டு என்ற பெயருடைய அந்த அணைமட்டும் கன்னடியயெனாருவனால் கட்டப்பட்டதென்பதும் அவ்வணையிலிருந்து செல்லும் கால்வாய்களின் போக்கைக் காட்டுவதற்காகவே அப்பசு அனுப்பப்பட்டதென்பதும் கதையின் வேறொரு பாகத்தால் விளங்குகின்றன. அப்பசு எங்கெங்குச் சென்றதோ அங்கங்கெல்லாம் கால்வாய் வெட்டப்பட்டது. எங்கெங்கு அது படுத்ததோ, அங்கெல்லாம் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன. உண்மைப் போன்ற இக்கதைகளினின்றும் அறியப்படுகின்ற ஒரே ஒரு குறிப்பான செய்தி அந்தக் கன்னடியன் பொதுநல எண்ணமுள்ளவன் என்பதே. அநேகமாய் இவன் மதுரை அரசின் பிரதிநிதியாய் இருக்க வேண்டுமென்பதும் இப்போதைக்கு அறியக் கிடக்கிறது.

இவ்வணைக்கட்டுக் கட்டப்பட்ட காலம் தெரியவில்லை. ஆனால், அதன் காலம் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 16 ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் எந்தக் காலமாகவேனும் இருக்கலாம் என்று கூறலாம். கால்வாய்க்கு அருகேயுள்ள சிறு கோவிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் குறிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு அருகேயே ஒரு சிறு கோவில் உள்ளது. அங்கு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி உள்ளுர்த் தேவதைக்கு ஆண்டு தோறும் பலிகள் கொடுக்கப்பட்டன. அன்றைய தினத்தில் கால்வாயில் தண்ணீர் செல்ல நீர்க்கால்கள் பல ஆடம்பரங்களுடன் திறக்கப்படும். அதே கன்னடியனால் சேரன்மா தேவியில் ஒரு சத்திரம் கட்டப்பட்டுள்ளதென்பது சொல்லப்படுகிறது.

சங்குண்ணி மேனன் எழுதியுள்ள திருவாங்கூர் சரித்திரத்தில் மற்றொரு கதை குறிக்கப்பட்டுள்ளது.

குண்ணாடியர் என்று சாதாரணமாக வழங்கப்படும் தெலுங்குப் பார்ப்பனார் ஒருவர் வேலூர் மகாராஜா பிரதா பருத்திரனிடமிருந்து நன்கொடையாக அதிகமான தங்க நாணயங்களைப் பெற்றார் என்றும், அந்தப் பார்ப்பனர் திருவடி தேசத்தில் (திருவாங்கூர்) உள்ள ஒரு மலையில் வசித்துவந்த அகஸ்திய முனிவரின் அறிவுரையால் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஓர் அணைக்கட்டுக் கட்டியதாகவும் (அது இன்றும் உள்ளது), அதிலிருந்து வேளாண்மைக்காகக் கால்வாய்கள் சுமார் இருபத்தொரு மைல் அகலத்திற்கு