பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3 கால்டுவெல்


இதுவரை தெரியாமலும் கருதாமலும் விடப்பட்ட கல்வெட்டுகளைத் தேடுதல் வேண்டும். அவற்றுள் பெரும்பாலானவை ஒவ்வொரு கிராமத்தின் கோயில்களின் உட்புறச் சுவர்களிலும் காணப்படும். அவற்றைக் கவனித்து அறிதல் மூலமாகக் கற்றறிந்த பகுதிவாழ் மக்கள் தங்கள் நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறந்த தொண்டு புரியலாம். கல்வெட்டுக்களிலிருந்தும் நாணயங்களிலிருந்தும் உருவாகும் பழைய இந்திய வரலாறே சிறப்புடையது. புகழ்பெற்ற கற்பனைக் கதைகள், காவியக் கட்டுக் கதைகள் முதலியவை எந்தப் பெயரால் போற்றப்பட்டபோதிலும் அவை புறக்கணிக்கப்பட வேண்டும். இதனால், இழப்பு ஏற்படாதது மட்டுமின்றி, மிக்க நன்மையும் விளையும். நம்பிக்கை அற்ற வழிகாட்டியைவிடச் சொந்த அறிவே மிகச் சிறந்தது. ஏற்கெனவே கல்வெட்டுக்களை ஐரோப்பியர்கள் தேடி அவற்றிற்கு விளக்கம் தரும் முறையில் சிறிது வேலை செய்திருக்கின்றனர். இவை கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களைவிடச் சென்னையில் மிகக் குறைவான முறையில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பியர் சிலர் எவ்வாறு தம்மையே அதற்காகக் காணிக்கையாக்கி ஊக்கத்துடன் இத்துறையில் உழைக்கின்றார்களோ, அவ்வாறே கற்றறிந்த உள்நாட்டவரும் உழைக்க முற்படின், அவர்கள் செய்ய வேண்டுபவை பல இருக்கின்றன; என்றும் இருந்து கொண்டு இருக்கும். இந்தியாவில் வசித்துவரும் ஐரோப்பியர்களுக்கு இல்லாத பல வசதிகள் உள்நாட்டாருக்கு இருக்கின்றன. சூரிய வெப்பத்திற்கு அவர்கள் அஞ்ச வேண்டுவதில்லை. எந்த இடத்தில் பழமையானதைக் கண்டாலும், எவ்வித இடையூறுமின்றிப் பயணத்தின் போது தங்கி ஆராய்வதற்கு வசதி உண்டு. மேலும், ஐரோப்பியர்கள் கோவில்களின் வெளிச்சுவரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்வதோடு மட்டும் மனநிறைவு அடைய வேண்டியதுதான். ஆனால், உள்நாட்டார் கோவில்களின் உட்புறச் சுவர்களிலுள்ளவற்றையும் ஆராயலாம். மதிப்புள்ள உள்நாட்டுக் குடும்பத்தினர் பலர் தம்மிடமிருக்கும் செப்பேடுகளை ஐரோப்பியர்களுக்கு ஆராய்ச்சிக்காகக் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், உள்நாட்டார் எளிதில் இச் செப்பேடுகளை ஆராய இயலும் (உள்நாட்டார்க்கும் இவ்வகையில் ஏமாற்றமே! - ந.ச.). இம்மாநிலத்தின் தமிழ் மாவட்டங்களிலுள்ள கற்றறிந்த தமிழர் ஒவ்வொருவருக்கும் புதைபொருள் ஆராய்ச்சித் துறையில் எளிமையான - ஆனால் இன்றியமையாத - வேலை இருக்கிறது. எனவே, காலங்கடக்குமுன் ஒவ்வொருவரும் பொதுவாக இழந்துவிட்டதாகக் கருதப்படும் மாநிலத் தாய்மொழியிலுள்ள பல புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்க