பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 4

வேண்டும். பழங்காலத் தமிழ்ப் புத்தகங்களின் பெயர்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. அதற்கு முன்பு பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அவற்றின், பெயர்கள் கூட மறைந்துவிட்டன. தமிழ் இலக்கியத்திற்கு இளமைப் பருவமே இல்லாதது போலத் தோன்றுகிறது; கிரேக்கர்களின் கல்வித் தேவதையாகிய மினர்வா ஜூப்பிடரின் தலையினின்றும் முழு வளர்ச்சியுடனும், போர்க்கோலத்துடனும் புறப்பட்டது போன்றிருக்கிறது. இதற்குக் காரணம், மொழியின் இளமைப்பருவத்தைக் காட்டும் ஒவ்வொரு நூலும் அழிந்து போய்விட்டதே என்பது தெரிகிறது. கற்றறிந்த உள்நாட்டார் மடங்களிலும் வீடுகளிலும் கருத்துடன் தேடினால், அம்முயற்சிக்குச் சிறந்த பரிசாக மதிப்புள்ள சில உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம் (ஒவ்வொரு தமிழனும் உன்னி உன்னி உடல் குன்னி குன்னிச் செயல்பட ஒளிகாட்டும் உயர் மொழிகள்-ந.ச.).

மதுரையினின்றும் வேறுபடாத திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி வரலாற்றில் பழங்கால வரலாற்றைக் கருதும் போது ஏற்படும் தொல்லை இந்த மாவட்டம் தனியாக இராமையே. இது பாண்டிய நாட்டின் தென் பகுதியாகவே அமைந்திருந்தது. இம்மாவட்டம், சோழர்கள், ஆதி முகம்மதியர்கள், நாயக்கர்கள் முதலியவர்களின் ஆட்சியின் கீழும் பாண்டியர் ஆட்சியிலிருந்தது போலவே இருந்தது.

ஏறக்குறைய கி.பி.1744 இல் ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சியின் கீழிருந்த நாடுகளுடன் மதுரை நாடும் அதைச் சார்ந்த மாவட்டங்களின் பகுதிகளும் சேர்க்கப்பட்டன. அதன் பின்பே திருநெல்வேலி மாவட்டம் முதற்கண் வரியீட்டுச் செயல்களுக்காக மட்டும் மதுரையினின்றும் வேறான தனி மாவட்டமாகக் கருதப்பட்டது. மதுரையினின்றும் வேறுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு இலக்கியத் தமிழில் தென்பாண்டி - பாண்டி நாட்டின் தெற்குப் பகுதி - எனப் பொருள்படும் பெயர் இருந்தது. ஆனால், இது கொடுந்தமிழ் பேசப்பட்டு வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிருநாடுகளுள்ளும் ஒன்றைக் குறிக்கிறது. எனவே, தாமிரபரணி ஆற்றின் தெற்கே பரவியுள்ள திருநெல்வேலி மாவட்டம் முழுவதையும் இது குறிக்கின்றது என்று சொல்லவியலாது. திருநெல்வேலியின் தென்மேற்கிலும் கன்னியாகுமரியின் வட மேற்கிலும் பரவியிருக்கும் தமிழ்ப் பகுதியாகிய தென் திருவாங்கூர் நாடாகிய நாஞ்சில்நாட்டை இது குறிப்பதாகச் சிலர் கருதுகின்றனர். திருநெல்வேலி முழுவதும் தமிழே பேசப்பட்டு வந்தது. தமிழ்