பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 122


நெடுங்காலத்திற்குப்பின் தூத்துக்குடியில் கவர்னரைவிடச் சிறப்புப் பொறுப்புகள் அதிகாரங்கள் வாய்ந்த ராஜப் பிரதிநிதியை நியமித்தனர். டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியரைப் போன்று கடற்கரைச் செம்படவராகிய பரவர்களை ஆளும் ஆட்சி அதிகாரத்தைக் கேட்க வில்லை. ஆனால், அவர்களுடைய ஆதரவாளர்களும் காப்பாளர்களுமாய் இருந்தார்கள். எனவே, பரவர்கள் உள்நாட்டு இந்து மகம்மதிய அரசர்களின் படையெடுப்புக் கொடுமைகளினின்றும் காப்பாற்றப்படுவதற்காக அருகிலுள்ள ட்ச்சுக்காரருடன் நட்புரிமையுடன் வாழ வேண்டியிருந்தது. டச்சுக்காரர் வருகைக்கு முன்பு பரவர் சாதியைச் சேர்ந்தவர்களின் தலைவனாகிய சாதித் தலைவன் வீரபாண்டியன் பட்டத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சாதித் தலைவனுக்கு இருக்கின்ற செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய டச்சுக்காரர்கள் சாதித் தலைவனைத் தூத்துக்குடியிலேயே வசிக்குமாறு தூண்டினார்கள்.

1700 இல் பிரஞ்சு மதபோதகரான தவத்திரு மார்ட்டினின் ஒரு கடிதம் லாக்மானுடைய ‘கிறிஸ்தவ மதபோதகரின் பயணங்கள்’ என்பதில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் தூத்துக்குடி 50,000 மக்களுக்கு மேல் வாழும் செழிப்பான நகரம் என்பதை விவரித்துள்ளார். மக்கள் தொகையைப் பற்றி அவர் குறிப்பிடும் கணக்கை நான் ஐயுறுகிறேன். இப்பொழுது அது கடற்கரையிலே மிகச் செழிப்பான நகரமாய் விளங்குகிறது. புகைவண்டி இறுதி நிலையமாயுமிருக்கிறது; நகராட்சியால் ஆளப்பெறுகிறது. ஆயினும் 1871 இல் எடுத்த மக்கள் தொகைக் கணக்குப்படி மக்கள் தொகை 11,000 க்கும் குறைவாகவே உள்ளது. அதே ஆசிரியர் கடற்கரையிலுள்ள ஒரே இயற்கைத் துறைமுகம் தூத்துக்குடிதான் என்று எழுதியுள்ளார். இங்குப் புயற்காலங்களில் ஐரோப்பிய மரக்கலங்கள் பத்திரமாய் இருக்கும். அதிலிருந்து இப்போதிருப்பதைவிட அப்பொழுது ஆழம் அதிகமாய் இருந்ததோ அல்லது ஐரோப்பிய மரக்கலங்கள் சிறியனவாய் இருந்தனவோ, அல்லது இரண்டும் சேர்ந்திருந்தனவோ. ஏதோ ஒரு காரணத்தால், 1700 இல் ஐரோப்பிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழைந்தன என்பது தெரிகிறது. அவர் மேலும் கூறுவதாவது: ‘கடல் வழியாகத் தூத்துக்குடிக்குச் செல்பவர்களுக்கு அது அழகிய ஒரு நகரமாய்க் காட்சி அளிக்கின்றது. அங்குள்ள இரண்டு தீவுகளிலும் மிக உயரமான கட்டடங்கள் நிழல் தருமாறு அமைந்துள்ளன. டச்சுக்காரர்கள் சில ஆண்டுகளுக்குப்பின் அதே போல உள்நாடுகளிலிருந்து வரும் விக்கிரக ஆராதனைக்காரர்களின் அவமதிப்பினின்றும் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு சிறிய கோட்டையும் கட்டப்பட்டது. கடற்கரை ஒரத்திற் பல விரிவான பண்டகசாலைகள் கட்டப்பட்டன. அவை