பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 130


பெருந்திரு. பகோல்ட் என்ற ஆங்கிலேயனை மட்டும் சிறைப்பிடித்துச் சென்றனர். ஆனால், அவன் மனைவி பாளையத்காரர்களின் தலைமையிடத்திலுள்ள கோட்டைக்குத் தொடர்ந்து சென்று, தன் கணவன் உயிருக்காக மன்றாடினாள். உடனே பாளையக்காரர் அவனை விடுதலை செய்து, அவன் உடைமைகளையும் திருப்பிக் கொடுத்துவிட்டனர் (என்னே ஊமைத்துரையின் உயர்ந்த உள்ளம் - ந.ச.). தூத்துக்குடியில் அப்பொழுது பல டச்சுக்காரர்களும் இருந்தார்கள் ஆனால், அவர்கள் எல்லாம் பாளையக்காரரால் துன்புறுத்தப்படவில்லை. பாளையக்காரர்கள் அவர்களை நடுவுநிலைமை வாதிகளாகவோ, அல்லது நண்பர்களாகவோ எண்ணியிருந்திருக்கலாம். ஏனெனில் திருநெல்வேலியில் ஏற்பட்ட குழப்பங்கள் எல்லாவற்றின் போதும் எங்களுடைய கட்சியைவிட எதிரிகள் கட்சியையே டச்சுக்காரர்கள் அதிகமாகச் சார்ந்திருந்தார்கள். இந்தப் பெருந்திரு பகோல்ட்டின் மகன் பல வருடங்களுக்குப் பின் பஞ்சு வியாபாரம் சம்பந்தமாகத் தூத்துக்குடியில் மிக்க புகழ்பெற்றிருந்தான்.

பஞ்சு ஏற்றுமதி

இங்குத் தூத்துக்குடியில் பஞ்சடித்தலை முதன் முதலில் ஏற்படுத்திய செய்தியைப் பற்றி எழுத மகிழ்ச்சியடைகிறேன். இது மிகப் பிற்காலத்துச் செய்தியாயினும், இங்குக் குறிப்பிடத்தக்கது. முதன்முதல் இப்போது செஸ்ஷையரிலுள்ள பிரைட்டனிலிருக்கும் விவர்ப்பூல் வாசியாகிய பெருந்திரு சி. குருவ்ஸ் என்பவரால் பஞ்சடித்தல் தூத்துக்குடியில் ஏற்பட்டதாக அக்கணவான் எனக்குக் கூறினார். இது ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குமுன் - 1834 இல் நடைபெற்றது. பெருந்திரு. குருவ்ஸுக்கும் அவர் சகோதரனுக்கும் கொழும்பில் ஒரு வீடு இருந்தது. தூத்துக்குடியில் பஞ்சு அடிக்கப்படாமலே நேரடியாக இங்கிலாந்திற்கு அனுப்பவசதி இருக்கிறதா என்று பார்ப்பதற்காகக் குரூவ்ஸ் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அந்தக் காலம்வரையில் திருநெல்வேலிப் பஞ்சு அடிக்காமலே சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. சில சமயங்களில் பாளையங்கோட்டையில் அரைகுறையாக அடித்துப் பிறகு நன்றாக அடிக்கப்படத் துத்துக்குடியிலிருந்து சென்னைக்கு அனுப்பினர். பெருந்திரு. குரூவ்ஸ் 1831 மார்ச்சில் முதன்முதல் தூத்துக்குடியில் வந்து இறங்கினார். உடனே பெருந்திரு. ஹியூஸ்ஸைக் காணப் பாளையங் கோட்டைக்குச் சென்றார். இந்த ஹியூஸ், பாளையக்காரர் போரில் மிக்க புகழ் பெற்றவர். இச்சமயத்தில் எல்லாப் பஞ்சு வாணிபமும் அவர் கையிலேதான்