பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143 கால்டுவெல்


இந்தியக் கம்பெனியாரால் கொடுக்கப்பட்ட முதல் உதவியும் திருநெல்வேலியில் ஆங்கிலேயரின் முதற் படையெடுப்பும்

ஓர்ம் பாகம் 1 : கொள்ளிடத்திற்கும் தீபகற்பத்தின் முனைக்கும் இடைப்பட்ட நாடு, மகம்மது அலியிடம் உள்ள தன் உறவைப் பகிரங்கமாக உதறித்தள்ளவில்லை. ஆனால், அவனிடம் அக்கறையின்றி நடந்து கொண்டது. எனவே, அவன் 1751 இல் அவன் உடன்பிறப்பாகிய அப்துல்ரஹீம் என்பவன் தலைமையில் முப்பது ஐரோப்பியர் அடங்கிய படையுடன் 2,500 குதிரை வீரர்களையும் 3000 வேலையாள்களையும் அனுப்பித் திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 160 மைலில் இருக்கின்ற நகரமும் கன்னியாகுமரி வரை பரவியிருந்த எல்லையின் தலைநகரமுமாகிய திருநெல்வேலி அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தும்படி ஏவினான். அப்துல் ரஹீமுக்கு அந்நாட்டில் மக்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் ஏற்படவில்லை. ஆனால், அவன் தன் படையினரின் எதிர்ப்பை அடக்கவியலாது திணறினான். ஏனெனில், படையிலுள்ள அலுவலர் பலர் கூலிக்காரரே. அவன் அந்தப் படை வீரர்களுக்கு எவ்வளவு கடமைப்பட்டவனோ அவ்வளவு அவர்களும் இளவரசனுக்குக் கடமைப்பட்டவர்கள். எனவே, அவர்களுடைய எதிர்ப்புக்குப் பரிசாக அவர்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகையை மட்டுமன்றி அவர்களுடைய படைகளுக்குத் தேவையான பணத்தையும் கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்தனர். ஆங்கிலேயப் படைக்குத் தலைமை வகித்த லெப்டினண்டு இன்னிஸ் என்பவனின் புத்தி திறமையாலும் பல வாக்குறுதிகளாலும் கலகத்தைத் தவிர்த்தார்கள். எனினும், இதே தன்மையான கலகம் முகம்மதிய நாட்டில் மற்றொரு பகுதியில் வெளிப்படையாகவே ஏற்பட்டது.

அதிர்ஷ்டமிக்க வீரனாகிய ஆலம்கான் முதலில் சந்தாசாகிபுவின் கீழ்ப் பணியாற்றி வந்தான். பிறகு தஞ்சாவூர் அரசனிடம் வேலைபார்த்து வந்தான்; அண்மையில் அந்த இளவரசனையும் விட்டுவிட்டு மதுரைக்குச் சென்றான். அங்குச் சிறந்த அலுவலன் என்ற புகழ் அவனுக்கு அதிக மரியாதையையும் சலுகைகளையும் அளித்தது. இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இராணுவப் படையை இலஞ்சம் கொடுத்துத் தன்வசமாக்குவதில் அவன் வெற்றி கண்டான். அந்த இராணுவப்படையும் அவனைக் கவர்னராக நியமித்தது; சந்தா


★. இவனே திருநெல்வேலியில் காணப்பட்ட முதல் ஆங்கிலேயனாய் இருக்கலாம்.