பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 144


சாகிபுவைத் தன் சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டது; சந்தா சாகிபுவிற்காக அவன் அதிகாரத்தின் கீழ், நகரத்தை ஆட்சி செலுத்த ஒப்புக் கொண்டது.

மதுரை நாடு திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்கும் இடையே அமைந்துள்ளது. இவ்விரு நாடுகளையும் விடப் பரந்த நிலப்பரப்புடையது மதுரை நாடு. பழங்காலத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் ஒரே அரசனாய் இருந்த இளவரசனுக்கு இருப்பிடமாய் விளங்கியது இந்நகரம். இந்நகரம் சுமார் 4000 மூவடி சுற்றளவுள்ள சதுரமான இடம். இதைச் சுற்றி இரட்டைச்சுவர் அரணும் அகழியும் இருந்தன. திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்குமிடையே நடந்த போக்குவரவுகளை நிறுத்தியதால், அக்காலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாட்டில் பாதிக்கு மேற்பட்ட பகுதியை மகம்மதலி இழக்க நேரிட்டது. இச் செய்தி கிடைத்ததும் தளகர்த்தன் கோப் இழந்த இப்பிரதேசத்தைப் பெற்றுக் கொடுக்க முன் வந்தான். அவன் தோல்வியுற்றுப் படைவலியிழந்து திருச்சிராப்பள்ளிக்குத் திரும்பி வந்தான். இது 1751 இல் நிகழ்ந்தது. 1755 இல் கவனிப்புக்குரிய மிக முக்கியமான சம்பவங்கள் திருநெல்வேலி சரித்திரத்தில் நிகழ்ந்தன. அவற்றை நாம் இனிக் காணலாம்.

நவாபுவின் வேண்டுகோளின்படி 500 ஐரோப்பியர்களும் 2000 சிப்பாய்களும் அடங்கிய படையொன்று, 1755 இல் மதுரை திருநெல்வேலி நாடுகளுக்குச் சென்று, நவாபுவிற்குக் கீழ்ப்படிந்து துணைபுரியும்படி கட்டளையிடப்பட்டது. நவாபுவின் அண்ணனாகிய மபுஸ்கான் அந்நாடுகளில் நவாபுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தான். ஆனால், அவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கவனிப்பின்றியும் பயனற்ற நண்பனாயும் சில சமயங்களில் வெளிப்படையான பகைவனாயும் நடந்து கொண்டான். திருச்சிராப்பள்ளிக்குச் சிறிது தெற்கேயுள்ள மணப்பாறை, அப்பொழுது கலகக்காரனான பாளையக்காரன்வசம் இருந்தது. மேற்கூறிய படையுடன் கூட நவாபுவே மணப்பாறை வரை சென்று பிறகு திரும்பினான். முழுப்படையும் அப்பொழுதுதான் அந்நாட்டிற்கு வந்திருந்த ஆங்கில உத்தியோகஸ்தனாகிய கர்னல் ஹெரான் என்பவன் தலைமையில் சென்றது. சிப்பாய்கள் அனைவரும் உள்நாட்டுத் தலைவனின் விசேஷ அதிகாரத்தின்கீழ் நடத்திச் செல்லப்பட்டனர்.

கர்னல் ஹெரானின் படையெடுப்பும் மகம்மது யூசுப்கானும்

கர்னல் ஹெரானின் தலைமையில் சென்ற உள்நாட்டுப் படைத்தலைவன் மிக்க புகழ்பெற்ற படைவீரன். அவன் யூசுப்கான்