பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 146


(பார்க்க. எஸ். திருவேங்கடாச்சாரியின் இராமநாதபுரம் சேதுபதிகள் (1959) - ந.ச.) ஒரு முக்கியமானப் பிரதிநிதித் தூது வந்தது. இந்நாடு திருநெல்வேலியின் வடகிழக்குப் பகுதிக்கு அருகிலுள்ளது. அந்தப் பாளையக்காரர் சண்டையின்போது சந்தா சாகிபு மைசூரார் பக்கம் சார்ந்து போரிட்ட தன் செய்கைக்காக வருந்தி அக்குற்றத்திற்காகத் தான் மன்னிப்புப் பெற விரும்புவதாகவும், ஆங்கிலேயருடன் உடன்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர்கள் பாதுகாப்பில் நவாபுவிடம் நன்றியுடன் இருப்பதாகவும் கூறினான். அவன் எண்ணங்களின் உண்மைத் தன்மைக்குச் சான்றாக இலங்கைக்கு எதிரிலுள்ள கடற்கரை நாட்டிலுள்ள அவனுடைய இரண்டு குடியேற்ற நாடுகளைக் கம்பெனிக்குக் கொடுப்பதாகக் கூறினான். இப்போது அவர்கள் திருநெல்வேலி நகரத்தை அடைய வேறு வழியில்லாமல் பல நூறு மைல்கள் துன்பமும் துயரமும் நிறைந்த பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவன் மேலே சொல்லப்பட்ட இரு கடற்கரை நாடுகளைக் கொடுப்பதால் திருநெல்வேலியின் பிற்காலப் போக்குவரத்துக்கு மிக்க வசதி ஏற்படுமென்றும், நியாயமாகக் கூறினான். அன்றியும், மதராஸ் அல்லது டேவிடு கோட்டையிலிருந்து நான்கு அல்லது ஐந்து நாள் கடல் பிரயாணத்தில் அவன் அவர்களுக்குக் கொடுக்க எண்ணியுள்ள குடியேற்ற நாடுகளைத் துனைப் படை அடைந்துவிடலாமென்றும் அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஐம்பது மைல் தூரமே இருக்குமென்றும் விளக்கினான். இதைக் கேள்வியுற்ற கர்னல் ஹெரான், தானாக முன்வந்து கொடுக்கும் அந்நாடுகளினால் ஏற்படும் அளவிடற்கரிய நன்மைகளில் மயங்கி மேலிடத்தாரைக் கலந்தெண்ணாமலே பாளையக்காரனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆங்கிலேயருடன் ஏற்பட்ட நட்புரிமைக்கு அடையாளமாக ஆங்கிலேயக் கொடிகள் மூன்றை அப்பிரதிநிதித் தூதுவரிடம் கொடுத்து அவர்கள் நாட்டில் எது சிறந்த இடமென்று அவர்கள் கருதுகிறார்களோ அந்த இடங்களில் அவைகளைப் பறக்க விடுமாறும் உத்தரவு கொடுத்தான். இவ்வேலை முடிந்ததும் கர்னல் ஹெரான் கோவில்குடியைக் கைப்பற்றினான். இது கொத்தளங்களுடைய கோவில்; இங்கே தான் தப்பியோடிய மதுரை கவர்னர் ஒளிந்திருந்தான். இங்கிருந்துதான் ஆங்கிலேயப் படைவீரர்கள் ஆய்வின்றித் தங்கள் கொள்ளைப் பொருள்களுடன் சில சிறிய செப்புச் சிலைகளையும் எடுத்துச் சென்றார்கள். (அந்த நாளிலேயே அயலவர் நம் சிலைகளையும் திருடத் தொடங்கிவிட்டனர் - ந.ச.). இச்சிலைகளினால் அவர்கள் திரும்பும் வழியில் நாட்டானி கணவாயில் அவர்களுக்கு மிக்க துன்பம் நேரிட்டது.