பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 156


கொண்டான். அவர்கள் கம்பெனிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். இருபடைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள்.

பூலித்தேவரின் இடத்திற்கு முன்னால் நவம்பர் மத்தியில் கொள்ளையடித்த பின்னர் மக்புஸ்கான் தன் படைகளுக்குத் தேவையான பணத்தைக் கடன்வாங்குவதற்காகத் திருநெல்வேலிக்குத் திரும்பினான். அங்குப் பணம் கடன் கொடுத்தவர்களுக்கு நிலத்தை ஈடுகாட்டியே கடன் தொகையை அவனால் பெற முடிந்தது. அதற்குள் மூடிமையாவினாலும் நபிகான் கட்டாக்கினாலும் சமீபத்தில் அடைந்த வெற்றிகளால் உற்சாகப்படுத்தப்பட்டுத் தங்கள் திட்டங்களை விரிவாக்கிக் கொண்டார்கள்.

பூலித்தேவர் பரந்த நம் நாட்டையும் படையையும் விடத் தம் ஒழுக்கத்தின் மேன்மையாலும் புகழாலும் திருநெல்வேலியிலுள்ள மேற்குப் பாளையக்காரர்கள் அனைவர் குழுவிலும் உயர்ந்த பதவியை அடைந்தார். (அயலக அறிஞர் கால்டுவெல் புகலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க இப்புகழ் மொழிகள் ஆழ்ந்து கருதிப் போற்றத்தக்கன. - ந.ச.) அவர்களுள் மிக்க பலம் வாய்ந்தவர் வடகரைப் பாளையக்காரர் வடகரைப்பாளையம் சொக்கம்பட்டியோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது. பூலித்தேவரின் நாட்டிற்கு மேற்கில் சொக்கம்பட்டி மாவட்டம் அமைந்திருந்தது. இது மற்ற மாவட்டங்களைவிட அதிக நிலப்பரப்பும் ஜனத்தொகையும் உடையது. ஆயினும், பாளையக்காரர் பூலித்தேவரின் வார்த்தைகளையும் ஏற்றுக் கொண்டு அவர் கேட்டபொழுதெல்லாம் தம் படைகளை அனுப்பி வைத்தார். திருநெல்வேலியின் கிழக்குப் பக்கத்திலுள்ள பாளையக்காரர்கள் கட்டபொம்ம நாயக்கனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். இவ்விரு பிரிவினருக்குமிடையே பூலித்தேவர் ஒற்றுமை உண்டு பண்ண எண்ணினார். (என்னே அவர் ஏற்றம்? - ந.ச.) ஆனால், கட்டபொம்ம நாயக்கனும் அவனைச் சார்ந்த எட்டையபுரத்தானும் கர்னல் ஹெரானுக்கு ஆட்பினை கொடுத்திருந்ததால், அவர்களுக்கு என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சிப் பூலித்தேவரின் வேண்டுகோளுக்கு மறுத்துவிட்டனர். மேற்கே மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களையுடைய மதுரைப்பாளையக்காரர்கள் மிக எளிதில் இதற்கு இணங்கி, உதவியும் புரிவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். மூடிமையாவும் தப்பியோடிய மியானாவும் நபிகான் கட்டாக்கும் அதே சமயத்தில் நத்தம்பாளையக்காரை அக்குழுவில் சேரும்படி ஊக்கப்படுத்தினர். அக்குழுவின் உடனடி நோக்கம் மதுரை நகரத்தைக் கைப்பற்றுவதே. இத்தகைய பெரிய உடன்படிக்கை