பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157 கால்டுவெல்


ஒளிவாக இருக்க இயலாது. சென்னை அரசு திருச்சிராப்பள்ளிப் படைக்குத் தலைமை வகித்த காப்டன் காலியட்டிடமிருந்து இச்செய்தியை அறிந்தது. மதுரைக் கவர்னரிடமிருந்து நவாபு செய்தி அறிந்தான். அவர்கள் தக்க காரணங்களால் பெரிதும் அச்சமடைந்தார்கள். ஏனெனில் மதுரை அதன் இருப்பிடத்தாலும் பரப்பளவாலும் பாதுகாப்பாலும் தனக்குத்தானே கொத்தளமாய் இருந்ததுமன்றித் திருநெல்வேலி எல்லைக்கும் காவலாய் இருந்தது (மதுரையின் மாண்பு!- ந.ச.). மதுரை அதன் சொந்தக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டால் இவ்விரண்டிடத்தின் மேலும் திருச்சிராப்பள்ளிக்கு எவ்வித அதிகாரமும் இல்லாமற் போய்விடும். சென்னை அரசு முதலிலேயே மக்புஸ்கானின் திறமையின்மையை அறிந்திருந்தும், நவாபுவிடம் உள்ள மரியாதையினால் இதுவரை அவனுக்கும் மரியாதை கொடுத்துப் பொறுத்திருந்தது. ஆனால், இப்பொழுது பாளையக்காரர்களின் வெற்றிகளாலும் திட்டங்களாலும் ஏற்பட்ட முழு நெருக்கடியையும் கண்ட அவர்கள், அந்த நாடுகளின் அதிகாரத்தைத் தாங்களே ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தார்கள்.

பூலித்தேவரின் ஒட்டம்

இச்சமயத்தில் திருநெல்வேலி வாசியான முதலி ஒருவன் சென்னை வந்து முழு நாட்டையும் விளைநிலமாக வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினான். ஆனால், ஒப்பந்தங்களின் நிபந்தனைகளைச் சரிசெய்யச் சிலகாலம் தேவையாயிருந்ததால், மறந்து விட்டார்கள்.

முதலி என்பது தனிப்பட்ட பெயரன்று சாதிப் பெயர் இங்குக் குறிப்பிட்டவன் தளவாய் முதலியார்களைச் சேர்ந்தவன். இதனால் தொடர்ந்து பல ஆண்டுகள் வரை இக்குடும்பத்தினர் ஆங்கிலேயரிடம் கோபங்கொண்டிருந்தனர். முதலியுடைய சொந்தப் பெயர் தீத்தாரப்ப முதலியாய் இருக்க வேண்டும். தளவாய் என்பது குடும்பத்தின் பரம்பரைப் பெயர். அதற்குள் நாட்டைக் காக்க உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டுவது இன்றியமையாதது. ஆனால், கர்நாடகத்திலிருந்து ஐரோப்பா படை வீரரின் எப்பகுதியையும் இக்காரியத்திற்காக அனுப்ப இயலாது போயிற்று. எனவே, 100 சிப்பாய்களை அனுப்பத் தீர்மானித்தது. இந்தச் சிப்பாய்ப் படை மக்புஸ்கானால் விடப்பட்ட படையுடனும் நவாபுவினுடைய படையுடனும் சேர்ந்து மொத்தத்தில் முகம்மது யூசுப்கான் தலைமையில் செல்லக் கட்டளையிடப்பட்டது. ஆங்கிலேயப் பட்டாளம் வேலூரிலிருந்து திரும்பியவுடன் யூசுப்கான் திருச்சிராப்பள்ளியை நோக்கி முன்னேறினான். முன்னதாகவே