பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159 கால்டுவெல்


இந்த வெற்றி இதுவரை வாக்குறுதியின்படி உதவி செய்யச் சமயம் பார்த்திருந்த மதுரை பாளையக்காரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே, 25,000 பேர்களடங்கிய படை இப்பொழுது திரண்டது. அதில் 1000 குதிரை வீரர்களும் இருந்தனர். இந்தப் படையினால் உற்சாகப்படுத்தப்பட்ட அவர்கள் தலைவன், மதுரை நகரைத் தாக்குவதற்கு முன்பு மக்புஸ்கானைத் திருநெல்வேலியிலேயே எதிர்த்துப் போரிட நிச்சயித்தான். இதற்குள் கட்டபொம்ம நாயக்கன் சில மாவட்டங்களைத் தருவதாகவும் கிழக்குப் பகுதி பாளையக்காரர் படையுடன் அவனைச் சேர்த்துக் கொள்வது போன்ற மற்ற இலாபங்களையும் எண்ணி மக்புஸ்கான் கட்டபொம்மனுடன் இணங்கினான். சேர விருப்பமுடைய எல்லாக் குதிரை, காலாட்படைகளையும் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவனுடைய முக்கியப் படையினர், அவனிடம் முன்பே இருந்த 1500 குதிரை வீரரும் ஜமால் சாகிபுவின் தலைமையிலிருந்த ஆயிரம் கம்பெனிப்படை வீரருமாவர். இப்படையில் ஏற்பட்ட ஆள் குறைவு சீக்கிரத்தில் சிறந்த வீரர்களால் நிரப்பப்பட்டிருந்தது. இப்போர் திருநெல்வேலிக்கு ஏழு மைல் தூரத்தில் மார்ச்சு 21 ஆம் தேதி நடைபெற்றது. வழக்கமான இந்நாட்டுப் போர்களைவிடக் கடும்போராய் இருந்தது இது. இதன் இறுதியில் மூடிமையா வீழ்ச்சியடைந்தான். குதிரை வீரருடன் துணிவுடன் போர் செய்யும்போது அவன் வெட்டப்பட்டான். வெற்றியடைந்தவன், தளபதியானான். 200 கூலிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்; 300 குதிரை வீரர் படையும் துப்பாக்கிகளும், யானைகளும் கைப்பற்றப்பட்டன. இப்போர் சூழ்ச்சிக்காரரின் படையைச் சிதறடித்துவிட்டமையால், இவ்வெற்றியால் மதுரை காக்கப்பட்டது. பகைவர் அனைவரும் முக்கியமாகப் பூலித்தேவரும் மற்றவர்களைவிடப் பெரும் பயமடைந்து போர்க்களத்திலிருந்து அவரவர் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

மகம்மது யூசுப்கானின் ஆட்சி

இவ்வெற்றிச் செய்தி மார்ச்சு 24 ஆம் தேதி திருச்சிராப்பள்ளிக்கு எட்டியது. அச்சமயத்தில் மகம்மது யூசுப் புறப்படத் தயாராய் இருந்தான். அவன் படையில் 1200 சிப்பாய்களும் 100 ஆப்பிரிக்க வீரர்களும், 150 கூலிப்படை வீரர்களும் ஐரோப்பியர் மேற்பார்வையில் இருந்தார்கள், 4 பீரங்கிகளும் ஒரு 18 இராத்தல் பீரங்கியும் இருந்தன. பட்டாளம் புறப்படச் சிறிது நேரத்திற்கு முன்னே கட்டபொம்ம நாயக்கனும் எட்டையபுரப் பாளையக்காரனும் தங்கள் பிணை ஆட்களை மீட்டுக் கொள்ளக் காப்டன் காலியாட்டுடன் உடன்படிக்கை செய்து