பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 166

 முக்கியமாக 1740, 1760 ஆண்டுகளிலும் திருநெல்வேலி மாகாணம் தீராத குழப்பப் போர்களினால் அதிர்ச்சி அடைந்திருந்தபோது இத்தொகை பஞ்சாயத்தாரின் தீர்ப்பின்படி உயர்ந்து விட்டது. துணையற்ற கிராமவாசிகள் கொள்ளையடிக்கப்படுவதினின்றும் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது பாளையக்காரர்கள் இந்த வரியைச் சுமத்தி வசூல் செய்தார்கள். பாளையக்காரரின் வலிமையினாலும் பாளையக்காரரைத் தக்க அதிகாரத்துடன் கண்டிக்கத் திறமையற்ற நவாபு அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையால் இது உறுதிப்பட்டது.

வரிக் கொடுமை

வாஷிங்டன் மேலும் கூறுவதாவது, இந்த வசூல் தொகை தாமதமின்றிச் செலுத்தப்படாவிட்டால் சித்திரவதையும் சவுக்கடியும் கொடுக்கப்பட்டன. கிராமத்தார் அனைவரும் சிறைவைக்கப்பட்டனர். ஒவ்வொரு தொழிலும் தடை செய்யப்பட்டது. கால்நடைகள் பட்டிகளில் அடைக்கப்பட்டன. குடிமக்கள் கைது செய்யப்பட்டார்கள் பாளையக்காரர்கட்கு உரிய பாளையங்களில் சில சமயங்களில் கொலைகளும் நடந்தன. சுருக்கமாகக் கூறினால் பணம் செலுத்தப்படும் வரை எல்லாவிதமானக் கொடுமையும் மிருகத்தன்மையானச் செயல்களும் செய்யப்பட்டு வந்தன எனலாம்.

வேட்டை வரி, திருமணச் செலவு வரி முதலிய விளக்கமற்ற அளவில்லாத காரியங்களுக்காக மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பாளையக்காரர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வந்தார்கள். சமாதானமாகச் சர்க்கார் நிலத்திலே உழும் விவசாயிகளை நாட்டின் நடுவே படையுடை (ஆயுத பாணிகளான) படைவீரரை நிறுத்திப் பயமுறுத்தினார்கள். இத்தகைய தீமைகள் எதிர்க்கப்படவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் திருநெல்வேலி மானுவலில் ஸ்டுவர்ட்டு என்பவர் பாளையக்காரர்களைப் பற்றியும் அவர்களது காவல் முறைகளைப் பற்றியும் கூறியிருப்பதை இங்குச் சேர்த்துள்ளேன்.

மறவர் அல்லது வன்னியர்

தென்னிந்தியாவிலுள்ள விசித்திரமான சாதியினரான மறவர் அல்லது வன்னியரைப் பற்றி மிகச் சிறப்பான சரித்திரம் உள்ளது. பாளையக்காரர் பலர் அல்லது கப்பம் செலுத்தும் தலைவர்கள் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருநெல்வேலி பற்றி ஆங்கிலேயருடன் சென்ற நூற்றாண்டின் பின்பாதியிலும் இந்த நூற்றாண்டின் முதற் சில ஆண்டுகளிலும் கலகம் செய்து