பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167 கால்டுவெல்


கொண்டிருந்தார்கள். கப்பம் கட்டும் இந்தத் தலைவர்கள் அதே சமயத்தில் பல சாதித் தலைவர்கள் அல்லது மக்கள் பிரிவின் தலைவர்களுள் மிகச் சிறந்த குணங்கள் ஒருங்கே பொருந்திய கலகக்காரத் தலைவனைப் பின்பற்ற வீரம், சுறுசுறுப்பு, முயற்சி, தந்திரம் முதலியவை வாய்ந்த சீடர்களை இப்பிரிவினர் தயார் செய்தனர்; அல்லது எப்பொழுது அமைதி நிலவச் செய்யத்தக்க மத்திய அதிகாரிகள் இல்லாதிருக்கிறார்களோ, அப்பொழுது இரத்தம் சிந்துவதிலிருந்தும் சூறையாடப்படுவதிலிருந்தும் தங்களைக் காப்பாற்றுவதற்காக அமைதியுடனிருந்த விவசாயிகளே அவர்களைத் தயார் செய்தார்கள்.”

“எனவே, திசைக்காவல் எனப்படும் தேசக்காவலும் தலக்காவல் அதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள கிராமங்களடங்கிய நாட்டில் வழியை ஆயுதம் தாங்கிய பகல் கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றுதல், தனித்தனி கிராமங்கள் அவர்களுடைய வீடுகள் பயிர்கள் முதலியவைகளை ஒளிவான (இரகசியத்) திருட்டுகளிலிருந்து காப்பாற்றல் முதலிய முறைகள் ஏற்படலாயின. கப்பம் செலுத்தும் தலைவன் தன் கோட்டைக்கருகேயுள்ளவர்களிடமிருந்து ஆயுதபாணிகளின் தாக்குதல்களின்போது அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் பணம் வசூலித்து வந்தான். அதே சாதியைச் சார்ந்த அவனுடைய வேலைக்காரர்கள் கிராமத்தின் பல பாகங்களுக்குச் சென்று சம்பளம் வசூலித்தார்கள். சில சமயங்களில் கிராமத்தார்களின் சொத்துகளைத் திருடர்களிடமிருந்து காப்பற்ற அல்லது அப்படி ஏதேனும் களவாடப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்த மதிப்பீட்டை மீட்டுக் கொடுக்கக் கூலியாக வாடகையில்லாத நிலங்களையும் பெற்றுக் கொண்டார்கள். கிராமக் காவல் சம்பளத்தைப் போலவே தேசக்காவல் சம்பளத்தைக் கேட்பது இக்காலத்தில் சாதாரண சம்பவமாய் இருக்கின்றது.”

இக்காலக் குறுநில மன்னர் (ஜமீன்தார்)களைப் பற்றி ஸ்டூவர்ட்டு என்பார் கூறும் செய்தியை இங்கே குறிப்பிடுவது சுவையுடையதாய் இருக்கும்:

“வெவ்வேறு ஜமீந்தார்களின் அதிகாரத்திற்குட்பட்ட குத்தகைக்காரர் நிலை அல்லது தீவினை, முன்யோசனையின்மை முதலிய காரணங்களால் விற்கப்பட்டு மிட்டாதார்களாகப் பிரிக்கப்பட்ட பழைய ஜமீந்தாரிகளிலுள்ள குத்தகைக்காரர்களின் நிலை அரசாங்க நிருவாகத்திலிருந்த தாலுக்காவிலுள்ள வேளாளர்களின் நிலையைப் போல அவ்வளவு மனநிறைவாய் இல்லை. வரிமுறை எல்லா