பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 170


கொடுத்திருக்கின்றார்.

திருநெல்வேலியைப் பற்றிக் கர்னல் புல்லர்ட்டன் விளக்கம்

1783 இல் அநீதியான ஆட்சி உச்சநிலையிலிருந்தபோது திருநெல்வேலியின் நிலையைப் பற்றிக் கர்னல் புல்லர்ட்டன் விவரித்துள்ளதை அப்படியே இங்கே சொல்வதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. மேலும் நான் அறிந்தவரை வெளிப்படையாய் வந்த திருநெல்வேலியின் முதல் வருணனை இது என்பதால் இக்குறிப்பு மேலும் அதன் சுவையை மிகைப்படுத்துகிறது. இக்குறிப்பை இங்கே சேர்ப்பதால் எவையோ சில சம்பவங்களை எதிர்ப்பார்ப்பதாகத் தோன்றலாம். ஆனால் முக்கியமாகப் பாளையக்காரர் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கதைகள் இனி மிக விளக்கமாய் இருக்குமென நம்புகிறேன்:

‘கடைசியாக ஆனால் அதிகமாக எண்ணக் கூடிய தென்எல்லை திருநெல்வேலி. அது, 115 மைல் நீளமும் 75 மைல் அகலமுடையது. ஏற முடியாத உயரமுடைய மலைப்பிதுக்கம். திருநெல்வேலியை வடக்கே திப்புச்சுல்தானுக்குக் சொந்தமான வாட்ராப் ஒட்டம்பொள்ளும் காட்டுப் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கிறது. வடகிழக்கேயும் கிழக்கேயும் மதுரை இராமநாதபுரம் எல்லைவரையும் தெற்கே கடல் வரையும் பரவியிருந்தது. மேற்கே திருவாங்கூர் ராஜாவின் நாடு எல்லையாய் இருக்கிறது. திருநெல்வேலியும் திருவாங்கூரும் கன்னியாகுமரியில் முடிவடைகின்றன. இந்த மாகாணத்திற்கு இயற்கை மிகவும் கருணை காட்டியுள்ளது. இதன் மேற்பரப்பு கடற்கரையிலிருந்து வட எல்லையிலுள்ள மலைகளை அடையும்வரை பொதுவாகத் தட்டையாயிருக்கிறது. இந்நிலப்பரப்பை ஆறுகள் குறுக்கிடுவதால், நெல் விளைச்சல் மிகுதியாய் உள்ளது. இதன் வறண்ட பகுதிகளில் பஞ்சு அதிகமாய் விளைகிறது. அடுத்திருக்கும் இலங்கைத் தீவில் உள்ள விளைபொருள்கள் இங்கு அதிகமாய் விளைகின்றன. இதனால் டச்சுக்காரர்களின் எதிரிகள் கூட நம்மிடம் இலவங்கப்பட்டை வியாபாரத்தை ஆரம்பிக்கும்படி செய்தது. ஆனால் இங்கு ஏற்பட்டிருந்த விசித்திரமான ஆட்சி, இந்த நூற்றாண்டில் முகம்மதியர்களின் ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடிகள், அரசர்களின் சீர்கேடான வழிகள் முதலியவைகள், இயற்கையின் நலன்களையும் பாழாக்கிவிட்டன. திருநெல்வேலிவாசியான அரசன் ஒருவன் ஆட்சி செலுத்தியபோதும் பரந்த நிலப்பரப்பு மட்டும் குறைந்துபோயிற்று. இப்பகுதி மிகப் பெரிய குத்தகைக்கு விடுபவர்களிடம் குறிப்பிட்ட தொகைக்குவிடப் பட்டது. அவர்கள் கொடுமையான வலிமையால் பெரும் இலாபத்திற்கு