பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 172


'அக்காலக் கீழ் ஆணையர்கள் கொடுமையை வளர்த்து விட்டு ஆலோசனையற்ற வழிகளில் அளவுக்கு மீறிய வரிகளை வசூலிக்கலாமென விரும்பினார்கள். ஆங்கில அரசாங்கத்தினரால் இந்தக் கீழ் ஆணையர்களின் ஒழுங்கீனம் முழுவதையும ஒடுக்க முடியவில்லை. நாட்டின் நிலையை எண்ணி மிகப் பெரிய மாவட்டங்களை அதிகமாகப் பேரம் பேசுபவர்களுக்குக் குத்தகைக்கு விடும் பழக்கத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டியது இன்றியமையாததாயிற்று. பலத்தை வீண் செய்வதைத் தடுக்க எவ்வளவு முன் எச்சரிக்கையாயிருந்தும் குத்தகைக்கு விடுபவனுக்குத் தடையற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டாலன்றி, வரிவசூல் நடைபெறாது. அடிக்கடி அவனும் கொள்ளையடிக்கவும் களவாடவும் விரும்புவான். இதனால் இறுதியில் அவனுடைய மாநிலத்தை அழியவிட்டுத் தான் செல்வனாக முடிகிறது. உண்மை என்னவென்றால், குத்தகைக்கு விடுபவர்கள் நியமிக்கப்பட தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் வேளாளர்கள் குடியானவர்கள் முதலியவர்களன்றி, உற்பத்தியாளர்களன்றி, உற்பத்தியாளர் கைவேலைக்காரர் மற்றும் ஒவ்வொரு இந்திய வாசியும் வெளிப்படையாகக் கொடுமை, செய்பவனின் கருணைக்கு முழுதும் உடன்பட்டிருக்கிறார்கள்.

'தீபகற்பத்தின் இந்தப் பகுதி எங்கும் நிலைநிறுத்தப்பட்ட இந்தப் பழக்கம் ஆண்டுகள் கணக்காகத் தொடர்ந்து வருகிறது. குடியானவனுக்கு முதற்படி விளைச்சலில் பாதிமட்டும் அவன் குடும்பம் வாழவும் நிலத்தை மறுபடி உழுதற்கும் கொடுக்கப்படுகிறது. மற்றொரு பகுதி ஆட்சியினருக்கு உரிமையாக்கப்படுகிறது. வளமிகுந்த இடங்களில் ஹைதரின் ஆட்சியின் போது ஆண்டுதோறும் மூன்று போகம் விளைந்தபோது 40 சதவீதத்திற்குக் குறைந்த விளைச்சல் குடியானவனுக்குக் கொடுக்கப்பட்டதாக இல்லை. ஆயினும், நூற்றில் பதினாறு பங்கில் குடும்பத்தைப் பாதுகாத்து வேளாண்மைக் கருவி, கோட்டை விதை, நிலத்தை உழுவதற்கு ஏற்படும் எல்லாச் செலவுகள் யாவையும் செய்ய இயலாதென மறுத்த மதிப்பு வாய்ந்த குடியானவர்களைக் கடற்கரையிலுள்ள குத்தகை விடுபவர்கள் சிறை செய்யவும் கடுமையான தண்டனைகளை விதிக்கவும் தயங்கினார்கள். ஆனால், தீவினை விளைவாக அக்குடியானவர் அந்த நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டால் அவன் மேலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கொடிய தண்டனைகள் பல உண்டு. அவன் வாரக் கணக்காக நீர்ப்போக்குகள், நீர்த்தேக்கங்கள், நதிகளில் அணைக்கட்டுகள் முதலியவைகளைச் செப்பனிட வேண்டும்.