பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 184


வகுப்பினரைக் குறிக்கிறது. சிவகிரிப்பாளையக்காரர் இந்த இனத்தைச் சேர்ந்தவர். இளையரான் பெண்ணைப் பாளையக்காரரும் வன்னியரே. மகம்மது யூசுபால் தோற்கடிக்கப்பட்ட சிவகிரிப் பாளையக்காரரும் வன்னியரே.) மகம்மது யூசுபால் தோற்கடிக்கப்பட்ட சிவகிரிப் பாளையக்காரன் தன் கூலிப்பட்டாளத்தை வெளியே அனுப்பினான். அப்பட்டாளம் நள்ளிரவில் அந்தக் குதிரைப்படை மீது பாய்ந்து, கூக்குரலாலும் வெடி முழக்கத்தாலும் அவர்கள் கூட்டத்தைக் கலைத்து, 40 குதிரைகளைக் கைப்பற்றியது.

புரட்சி செய்த சமேதார்கள் மதுரையை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டு திருநெல்வேலி மேற்குப் பாளையக்காரர்களுடன் மக்புசுகான் தங்கள் உதவிக்கு வருவான் என்று எதிர்பார்த்திருந்து பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள். பரக்கத்துல்லா மக்புசுகானை விட்டுவிட்டு வந்தபோது அவன் 500 குதிரை வீரரும் ஆயிரம் காலாள்களும் நெல்லித் தங்கவில்லி (நெற்கட்டுஞ்செவ்வல்) யில் இருந்தார்கள். அவன் மதுரையைக் காக்க வந்த அதே சமயத்தில் காலியட்டு, திருநெல்வேலியிலிருந்து முக்கியமாக ஆங்கிலத் துருப்புகளுடன் மதுரையைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். காலியட்டு கண்ணுக்கு மறைந்ததும் மக்புசுகானும் பூலித்தேவரும் அந்த இடத்தை ஆக்கிரமித்து மற்றப் பாளையக்காரருடன் சேர்ந்து பத்தாயிரம் பேர்களடங்கிய படையைக் கூட்டினர். ஏப்பிரல் இறுதியில் இந்தப் பட்டாளம் நெல்லித் தங்கவில்லியிலிருந்து, திருநெல்வேலிக்கு 15 மைலுக்குள் இருந்த ஆழ்வார் குறிச்சியைத் தாண்டி முன்னேறியது. ஆனால், அவர்கள் அந்த நகரத்தை அணுகமுடியாதபடி அங்கிருந்த சிப்பாய்களால் அச்சுறுத்தப்பட்டனர்; அது பரந்த அந்நாட்டிலுள்ள மக்களைத் துன்புறுத்திச் சூறையாடியிருக்கும். ஏனெனில், இம்முறை அறுவடையில் அவர்கள் எண்ணிய தொகையை வசூலிக்காவிட்டால் சூன்மாத மத்தியில் அறுவடையாகும் வரை காத்திருக்க வேண்டும். ஆயினும் அவர்கள் தங்களுக்குப் பணம் செலுத்த வேண்டியர்களை உடனே கட்டும்படி உரிமைக் கட்டளை வெளியிட்டார்கள். இதற்குள் மக்புசுகான் திருவாங்கூர் அரசரின் துணை வேண்டிப் பேரம் பேசினான். அவ்வுதவிக்குப் பதிலாக அந்த அரசருக்குச் சிறிதும் உரிமையில்லாத மற்ற எல்லா மாவட்டங்களையும் தருவதாகக் கூறினான். இம்முயற்சி தோல்வியுறவே, அவனுடைய வழக்கமான உறுதியற்ற போக்கின் படி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்து கொள்ள முயன்றான். எனவே, காலியட்டுக்கு எழுதிய கடிதத்துடன் ஒரு பிரதிநிதியை அனுப்பி, நிரந்தர சராப்புகளின் ஜாமீன் பேரில் அவர்களிடமிருந்து நாட்டைக் குத்தகை எடுத்துக் கொள்ள எண்ணங் கொண்டிருப்பதையும் அவன்