பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 188

 கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையானப் பணத்தை ஆண்டு வருமானமாகக் கொடுத்துவிடுவதெனச் சென்னையில் தங்கியிருந்த நவாபிற்கு அரசாங்கத்தார் யோசனை கூறினார். இந்தத் திட்டத்தினால் இலாபம் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் இழப்பு எதுவும் உண்டாகப் போவதில்லை. பிரெஞ்சுக்காரர் எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு இந்த மாநிலங்களில் காலூன்றுவது கடினமாகிவிடும். நவாபு இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு மக்புசுகானிடம் உடன் படிக்கை செய்து கொள்ள ஒரு பிரதிநிதியை அனுப்பி வைத்தான்.

நவாபால் மக்புசுகானிடம் அனுப்பப்பட்ட பிரதிநிதி பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நெல்லித்தங்கவில்லி (நெற்கட்டுஞ் செவ்வலு)க்கு வந்தான். ஆனால், அவன் அங்கு மக்புசுகான் 50 குதிரைவீரர்களுடன் வறுமையைக் காட்டத்தக்க மிகப் பழைய கூடாரத்தில் தங்கியிருப்பதைக் கண்டான். அன்றியும், அவன் கூட்டாளிகளிடம் வெறுப்படைந்து நவாபுவிடம் மிக்க ஆதரவுடையவனாய் நடித்துக் கொண்டிருந்தான். ஆனால், சமாதானச் சரக்குகளைப் பற்றிப் பேசும் பொழுது, அந்த நாடு முழுவதையும் அவனுக்குச் சம்பளமாகக் கொடுத்தலான்றி, வேறெதுவும் அவனுக்குத் திருப்தியளிக்காது என்பது விளங்கிற்று. ஆனால், அவன் எண்ணங்களை அடக்கியவனல்லன். இப்பொழுது அவன் அறிவையும் அடக்க இயலவில்லை. கர்நாடகத்தில் அதிகாரம் பெற்று வரும் பிரெஞ்சுக்காரர்கள் உதவியால் வலிமை பெற்றிருக்கும் மேற்குப் பாளையக்காரர்கள் வெற்றி கொண்டார்கள். பிழப்பை நாடி மக்புசுகான் அவர்களைச் சார்ந்திருந்து அவர்களுடன் தன் பெயரையும் இணைத்து அவர்களிடமுள்ள பகையை வெளிக் காட்டாமல் நடித்துக் கொண்டிருந்தான். அப்படை பூலித்தேவர் துருப்புகளையும் கொத்தல்தாவா (கொத்தலைத் தேவர் என்று வழங்கப்படும் மறவருள் ஒரு பிரிவினர்) நடுவக்குறிச்சி சொரண்டை ஆகிய வடகரையைச் சேர்ந்த மூன்று மைனர் பாளையக்காரர்கள் அடங்கிய துருப்புகளையும் கொண்டிருந்தது. ஆங்கிலேயருடன் புதிய உறுதியான உறவு கொண்டிருந்த கட்டபொம்மனைச் சேர்ந்த எட்டையபுரத்தின் கிழக்குப்பாகத்திலிருந்தும் ஒரு படை அவர்களுடன் சேர்ந்திருந்தது. சேத்தூர் (சாத்தூர்) பாளையக்காரனையும் திருவல்லிபுத்துருக்குத் தெற்கே 15 மைல் தூரத்திலிருந்த கோட்டைக்குள் பூலித்தேவரின் கூலிப்பட்டாளத்தின் ஒரு பகுதியை அனுமதிக்க இணங்கும்படி செய்தனர். அவர்களுடனும் தன் படைகளுடனும் சேர்ந்து அருகேயுள்ள நாடுகளைக் கொள்ளையடித்தான். அச்சமயத்தில் மகம்மது யூசுப்பு பிரெஞ்சுக்காரர்