பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191 கால்டுவெல்


பிரெஞ்சுக்காரர் சென்னை முற்றுகையை முடிக்கும் வரை மக்புசுகான் தானும் ஒரு பிரெஞ்சுப் படையைச் சேர்த்துக் கொண்டு அதன் உதவியால் அந்த நாடுகளில் தன் அதிகாரத்தை நிலை நாட்டலாமென்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான். அவர்கள் கடிதங்களிலிருந்து அறிந்த பாண்டிச்சேரி ஆட்சிநிலையும் ஒற்றர்களின் செய்திகளும் அவனுடைய எண்ணத்தை மேலும் உறுதிபெறச் செய்தன. இந்த நல்ல ஊழினை எதிர்நோக்கி இருந்த மக்புசுகான் பூலித்தேவருடன் இருந்து கொண்டு அரசனைப் போல் போலி வாழ்வு வாழ்ந்து வந்தான். ஆனால் பூலித்தேவர் விரும்பி வழங்கியதைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் வக்கு வழியில்லை. ஆனால் பூலித்தேவரோ தன் சொற்படி பண விஷயத்தில் நடந்து கொள்ளாது அவனுக்கு வேண்டிய சாதாரண தேவைகளை மட்டும் மிகக் குறைவாகவே கொடுத்து வந்தான்.

யூசுபுகானின் வருகை அவனுடைய நிலையைச் சிறிது நலமுறச் செய்தது. மக்புசுகான் நாளடைவில் நவாபுடன் உடன் படிக்கை செய்து கொள்ளத் தயாராக இருப்பான் என்று பூலித்தேவர் பயந்தான். எளிதான வாழ்க்கையில் ஆர்வமுள்ள மக்புசுகான் அவனுக்கு ஏற்பட்ட இழிநிலையைக் கண்டு வெறுப்படையவில்லை. கிழக்குப் பாளையக்காரர் ஆலோசனைக் கூட்டங்களில் பார்வைக்காகவேனும் தலைமை வகித்தான். அப்பாளையக்காரர் அவர்களது காட்டுப் படையுடன் யூசுபைச் சந்திக்கத் தீர்மானித்து மேற்குப் பாளையக்காரரைப் பொது எதிர்ப்பிற்காக அழைத்தனர். மேற்குப் பாளையக்காரரும் பாளையங் கோட்டையைக் கடைசியாகத் தாக்கியபோது ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட துன்பங்களை மறந்து இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். மேற்குக் கூட்டணி ஆறு பாளையக்காரர்கள் அடங்கியது. அவர்களுடைய பழைய தலைவன் கட்டபொம்ம நாயக்கன் அண்மையில் இறந்துவிட்டான். அவனுக்குப் பின் அவன் உறவினன் அந்த இடத்திற்கு வந்தான். வழக்கமான அதே பெயரை வைத்துக் கொண்டு தன் முன்னோர்களின் கருத்தின்மைக்குப் பதிலாக ஆங்கிலேயரிடம் தீராத வெறுப்புடையவனானான். எட்டயபுரமோ எப்பொழுதும் கட்டபொம்மனுக்கு அடுத்தபடியாக முக்கியம் பெற்றது. இப்பொழுது செயலிலும் சிறப்பிடம் பெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து மகமது யூசுபைத் தொடர்ந்து சென்ற படையில் ஆறு படைப் பிரிவுகளும் அறுபது குதிரைகளும் இருந்தன. ஆனால் படையெடுப்பின் போது தொண்டைமானிடமிருந்தும் எப்பொழுதும் நல்லுறவிலிருந்து வந்த மறவர்களிடமிருந்தும் படைகளை வேண்டினான். அதன்படி மூன்று பாளையக்காரர்