பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 192


களிடமிருந்தும் 300 வீரர், குதிரை, கூலிப்பட்டாளம், சிப்பாய்கள் எல்லாரும் அவன் மதுரையை அடைந்ததும் அவனுடன் சேர்ந்து கொண்டன. உடனடியாக மேலும் அவன் படைகளைத் திரட்டத் தொடங்கினான். தன்னிடத்திலிருந்த படைகளை நகர்த்தியும் சிறப்பாகத் தேர்ந்தும் 300 குதிரைகள், 700 பயிற்சியுடைய சிப்பாய்கள் அடங்கிய படையை எட்டயபுரம் மாவட்டங்களைச் சூறையாட அனுப்பினான். பாளையங்கோட்டை படையிலிருந்து மூன்று படைப் பிரிவு அவர்களுடன் சேர்ந்து கொள்வதாக இருந்தது. பாளையங்கோட்டைப் படையினர் தங்கள் குறையைப் புதியவர்களைக் கொண்டு நிரப்பியிருந்தனர். சில தேவைகளால் மதுரையில் காலந்தாழ்த்தி விட்ட மகமது யூசுபுதன் பெரும்படையுடன் அங்கிருந்து வரும்வரை, கிழக்குப் பாளையக்காரரின் துருப்புகளை மேற்குப் பாளையக்காரர் சந்திக்கவிடாமல் தடுப்பதற்காக இறுதிவரை இப்படைப்பகுதி அந்த இடத்தைக் காக்க நிலையாக நிற்க வேண்டியதாயிற்று.

அவனுடைய முதல் படையெடுப்பு கொல்லம் கொண்டானில் ஏற்பட்டது. 1756 இல் அவன் அக்கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் அவன் கர்நாடகத்திற்குப் புறப்பட்டதும், பூலித்தேவரும் வடகரையும் தாங்கள் பெற்ற நிலத்தின் உரிமையை அதுவரை செலுத்திக் கொல்லம் கொண்டானில் தங்கள் காவலை நியமித்தனர். அது பீரங்கியில்லாத மண்கோட்டை. எனவே சிறிது எதிர்ப்பிற்குப் பின் அவன் கைவசப்பட்டது. அங்கிருந்து எட்டயபுரத்திற்கு எதிராக அனுப்பிய பெரிய படையைச் சந்திக்க முன்னேறினான். அடிப்படையோவெனில் இப்பாளையக்காரர்களுடைய மாவட்டங்களை எல்லாம் தொடர்ந்து சூறையாடி அவர்களுடைய சொந்த நாட்டில் தன் துருப்புகளை நிறுத்தி, அவனும் கட்டபொம்மநாயக்கனும் பூலித்தேவருடன் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக நாட்டைக் கடக்க முடியாது தடுத்தான். இந்தத் தலைவர்களைப் போதுமான அளவு தடுப்பதற்கான வழி செய்துவிட்டு, அப்படை கொல்லார்பட்டியை நோக்கிச் சென்றது. கொல்லார்ப்பட்டி, மதுரை திருநெல்வேலிக்குமிடையே செல்லும் நேர் பாதையின் நடுவே ஒவ்வொரு முனையிலிருந்தும் ஏறத்தாழ ஐம்பது மைல் தூரத்தில் உள்ளது. இக்கோட்டையும் 1756 ஜூனில் மகமது யூசுபுகானால் முற்றுகையிடப்பட்டது. இதனால் மிகவும் அழிவு ஏற்பட்டது. பாளையக்காரர்கள் கைதிகளாக்கப் பட்டனர். அக்கோட்டை திரும்பவும் வேறு யாராலேனும் கைப்பற்றப்பட்டதா அன்றி வேறு யாரும் அடுத்து உரிமைப் பாராட்டினாரா என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இச்சமயத்தில் அவர்களை யார் எதிர்த்தார்களோ அவர்கள் வசம்