பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193 கால்டுவெல்

அக்கோட்டை இருந்தது. ஏனெனில் அங்கு மூன்று நாட்கள் போராட்டம் ஏற்பட்டு அத்தாக்குதலில் நூறு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்; காயமடைந்தனர். பாளையக்காரர் இரவோடு இரவாய்த் தப்பிவிட்டனர். உள்ளே கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. பிறகு அப்படை மகமது யூசுபுடன் சென்ற தலைமைப் படையுடன் சேர்ந்து பெரும்படையாகக் கங்காதரம் வழியாகத் திருநெல்வேலியை ஜூலை மத்தியில் வந்தடைந்தது. அவர்கள், அங்கு வந்ததும் வராததுமாய், சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்புசுகானின் நிலையற்ற அறிவு விரைவாய் வேலை செய்ய ஆரம்பித்தது. அதன்படி தன்னுடைய வாழ்க்கைக்குத் தகுதியான ஜாகீர் ஒன்றைக் கொடுத்தால் அவன் கூட்டுப்படையை விட்டுக் கர்நாடகத்திற்குச் சென்று விடுவதாகக் குறிப்பிட்டு மகமது யூசுபுகானுக்கு ஒரு கடிதம் எழுதினான். அன்றியும் திருநெல்வேலி வந்துசேரக் காவல்படை ஒன்றையும் கேட்டிருந்தான். மகமது யூசுபு எவ்வித மறுப்புமின்றி, அவனுடைய வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுமென்று தெரிவித்து அவனைப்பற்றிச் சென்னைத் தலைவரிடம் பரிந்துரைத்தான். சென்னைத் தலைவர் மூலமாக அவன் நவாபிடமும் வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி நகரத்திற்கு வடக்கே 30 மைல் தூரத்திலுள்ள நடு நாடு திறந்தவெளி நிலப்பகுதி, நல்ல பயிரிடும் நிலம். கிழக்குமேற்குப் பாளையக்காரருடைய நாட்டிற்கிடையே அமைந்துள்ளது. இதுவே அவர்களுடைய சிறந்த கொள்ளையடிக்கும் பகுதியாயிருந்து வந்தது. மேற்குப் பாளையக்காரர் இந்த மாவட்டங்களுக்குள் செல்வதற்கான வழியிலுள்ள முக்கியமான தங்குமிடம் ஊத்துமலன்காடும் கோட்டையுமாகும். இது திருநெல்வேலிக்கு வடமேற்கே 35 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. எளிதான கொள்ளைகளால் செல்வந்தரான (இதுவும் எளிதா? - ந.ச.) இக்கோட்டைப் பாளையக்காரன் படைக்கலன்களுடைய பல கூலிப்படைகளை வைத்திருந்தான்.

புதுக்குழப்பங்கள்: மகமது யூசுபு திருநெல்வேலியை அடைந்தவுடனே பெரும்படையுடன் சென்று இவனை எதிர்த்தான். சில நாட்களில் கோட்டை அவன் வசமாயிற்று. அங்குச் சில துருப்புகளை நிறுத்திவைத்தான்.சொரந்தா (சொரன்தை) என்றழைக்கப்படுமிடத்தில் தற்காலிகமாக ஐம்பது குதிரை வீரர்கள் காவல்படையையும் சில வேலைக்காரர்களையும் சில கூலிப்படைகளையும் நிறுத்திவைத்தான். அவன் திருநெல்வேலி திரும்பிய அக்கணமே பூலித்தேவர் வடகிரி இவர்களின் கூலிப்பட்டாளக் கூட்டம் சொரந்தையிலிருந்த காவல் படையைத் திடீரெனத் தாக்கிக் கொன்றோ அல்லது குதிரையுடன்