பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 198

அவற்றைச் சுற்றி இடையிடையே அமைந்திருந்தன. ஒவ்வொரு கோட்டையும் தனிக் காவற்கோட்டையாகும். அதைச் சுற்றிலும் கைப்பிடிச்சுவர் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் ஏவலிடத்தக்க விதமாய் அமைக்கப்பட்டிருந்தது. கோபுரத்திற்கு ஏற வழி இரண்டு அடி அகலமுள்ள செங்குத்தான மேற்சரிவுச் சுவராகும். அதற்கு நுழைவாயில் கைப்பிடிச் சுவரிலுள்ள ஒரு ஒடுக்கமான திட்டிவாசல் ஆகும். கோபுரங்களுக்கு இடையேயுள்ள மறைப்புக்குக் கைப்பிடிச் சுவரில்லை. ஆனால் உயரத்தில் 15 அடி நீளமும் மூன்று அடி அகலமும் உள்ள அடித்தளத்திலிருந்த இரு புறங்களிலும் சரிந்திருந்த சுவர் மட்டுமே இருந்தது. உள்புறமுள்ள சரிவு வெளிப்புறச் சரிவைவிடக் குறைவான சருக்கமுடையது. ஆகையால் கோட்டை தாக்கப்பட்டபோது அதைக் காப்பவர்கள் எளிதாக உச்சியை அடைய இயலும். கோட்டையின் கைப்பிடிச்சுவரில் உச்சிக்குச் செல்லத்தக்க வட்டமான துளைகள் இருந்தன. கோட்டையின் கைப்பிடிச்சுவரிலுள்ள வட்டத்துளைகள் சிறிய படைகளினுடைய தேவைக்குப் பயன்படக்கூடியன. ஆனால் துப்பாக்கிக்குத் திறப்புகள் வைக்கப்படவில்லை. அதனால் கோட்டையில் தனித் துப்பாக்கிகூடக் கிடையாது. (பார்க்க: 1767 இல் கர்னல் டொனால்ட் காம்பெல் இக்கோட்டையைப் பிடித்த குறிப்பு, இவ்விவரம் வாசுதேவ நல்லூருக்குத்தான் பொருந்தும். ஏனெனில் மதுரை திருநெல்வேலி நாடுகளிலுள்ள மற்ற கோட்டைகளில் உச்சிக்கோட்டைகளும் வெளிப்புறச் சரிவில் ஒளிவு (இரகசிய) வழிகளும் இருக்கும். மதுரை பாளையங்கோட்டையைத் தவிர மற்றெல்லாக் கோட்டைகளும் மண்ணால் கட்டப்பட்டவை. வாசுதேவநல்லூர் கோட்டைச் சிறப்பும், அதை எதிர்த்த பெரிய படையும் சேர்ந்து அக்கோட்டையைக் காக்க சில ஆயிரம் கூலிக்காரர்களை வரவழைத்தது. ஆனால் 8 அல்லது 9 நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களைத் தவிர மற்றெல்லோரும் சுவர்களைக் காக்கக் காடுகளில் நிறுத்தப்பட்டனர். அங்கிருந்து ஒவ்வொரு பகலும் இரவும் இருதரப்பினரும் பாய்ந்து விழுந்தனர்; போரிட்டனர். யாரையோ ஒருவரைத் தாக்கிக் கொண்டேயிருந்தனர். சில வேளைகளில் இரண்டு பாசறைகளையும் தாக்கினர். பெரிய படைகள் வெவ்வேறு மூன்று நாட்கள் கொத்தளங்கள் மீது தாக்கின. இந்தத் தொடர்ந்த இடையீட்டால் 26 ஆம் தேதி வரை முடிக்க இயலாது - அதாவது படை வந்து சேர்ந்த 20 நாட்கள் வரைப் பெரும்படை பின் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் பீரங்கிப்படை தங்கள் வேலைகளைத் தொடங்கின. மகம்மது யூசுபு மதுரையிலிருந்து கொண்டுவந்த 18 பவுண்டு எடைக் குண்டுள்ள பீரங்கி ஒன்றுதான் மிக்க உறுதி வாய்ந்தது. மற்றவை ஆறு பவுண்டு