பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 12

-ந.ச.).குற்றாலத் தலபுராணத்தில் குற்றாலத்திற்கு இருவிதப் பெயர்கள் வழங்குகின்றன. (ஒன்று ‘த்த’ என்ற எழுத்துகளுடனும், மற்றொன்று ‘ற்ற’ என்ற எழுத்துக்களுடனும்). ‘குத்தாலம்’ என்பதுதான் அச்சொல்லின் வடிவம் எனின் ‘அச்சந்தரும் அத்திமரம்’ என்று பொருள்படும். அப்பெயர் குத்தால மரத்தருகேயுள்ள கோவில் அல்லது கிராமத்தைக் குறிக்கும். குத்தாலம் என்ற சொல் வடமொழியிலுள்ளதெனக் கூறப்படுகிறது. (அதில் என்ன வியப்பு! இயற்கை - ந.ச.). ஆனால், எந்த வடமொழி அகராதியிலும் இச்சொல்லின் சுவட்டைக் கூட என்னால் காண இயலவில்லை (அந்தோ! - ந.ச.) பொது வழக்கிலிருக்கும் ‘குற்றாலம்’ என்ற சொல் ஆலம் என்பதைக் குறிக்கும். ஆலம், அறிவு; உண்மையில் ‘குற்றின் விஷம்’ அதாவது ‘பாவத்தின் அழிவு’ என்ற பெயர்ப் பொருளுடன் பொருந்தியிருக்கிறது. ஆலம் என்பது வடமொழிச் சொல்லான ‘ஹாலஹாலா’ என்பது ‘ஹாஹாலா’, ‘நாசகரமான விஷம்’ என்பதன் திரிபு. இந்தப் பெயரே இவ்விடத்தின் தலபுராணத்தில் பொதுவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. குற்று என்ற சொல் எந்த அகராதியிலும் இல்லை. ஆனால் பாபத்தைக் குறிக்கும் மிகச் சாதாரணமான தமிழ்ச் சொற்களுள் ஒன்று ‘குற்றம்’ என்பது. இது பொருளளவில் ஒன்றுதான். குற்றாலத்தின் மூன்றருவிகளின் கீழ்ப்பாகம் வட அருவி - வடக்கிலிருக்கும் நீர்வீழ்ச்சி - என்று உள்நாட்டாரால் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இது 180 அடி உயரமுள்ள இரண்டு அருவிகளாலாகியது. இவ்வருவி விழும் மடுவிற்குப் பொங்கு மாங்கடல் - பொங்குகின்ற கடல் - என்பது பெயர். இதன் ஆழம் 38 அடி. மற்றோர் அருவி செம்பகாதேவி தீர்த்தம் (ஷண்பகாடவி - செண்பகக் காட்டிலிலுள்ள புண்ணிய தீர்த்தம்) என்று வழங்கப்படுகிறது. வடமொழிச் சொல்லாகிய ‘ஷண்பகா’ என்பதன் திரிபே செண்பகம் என்ற தமிழ்ச்சொல். மூன்றாவது அருவி தேனருவி - தேன் நீர்வீழ்ச்சி. குற்றாலத்தின் இலக்கியப் பெயர் ‘திரிகூடம்’ என்பது. ‘மூன்று பீடபூமிகளை அல்லது பீடங்களை உடையது’ என்று இப்பெயர்க்குப் பொருள் கூறலாம். குற்றாலத்தில் ஏலம் முதலியவை பயிரிடப்படுவது 1800 ஆம் ஆண்டில் காசாமேஜர் (Mr. Casamajor) என்பவரால் தொடங்கப்பட்டது (பார்க்க: டாக்டர் சேதுப்பிள்ளை - ‘ஊரும்பேரும்’ (1956, ப. 1427 - ந.ச.)

தாமிரபரணியின் கூடு துறை (சங்கமத்துறை - கூடுமிடம்)

  தாமிரபரணியாற்றின் செலவு, மலைகளிலுள்ள நீர் வீழ்ச்சிகள் முதலியவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பல காலங்களுக்கு முன்பே தாமிரபரணி கடலில் கூடுமிடத்தைப் பற்றிப் பழங்கால