பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 206


அவன் செய்து கொள்ளப் போகும் சமாதானத்தைப் பற்றி அறிந்த செய்தியும் அவர்களுடைய அடங்காத் தன்மையைப் போக்கிவிட்டது. எனவே, பல ஆண்டுகட்டு முன்பு இருந்ததுபோல் நாட்டிலெங்கும் அமைதி நிலவியது. அதே நிலையே நிலைத்து நிற்குமென்ற எண்ணத்திற்கேற்ற சூழ்நிலைகளும் உருவாயின. கோட்டைக் காவலுக்காகப் பயன்படுத்தப்பட்ட படையைத் தவிர மிகப் பெரிய இராணுவப்படை மகமது யூசுபுவசம் இருந்தது. ஏனெனில் அச்சமயத்தில் மைசூரார்க்கு எதிராகப் போரிட மதுரைக்குப் படையை அனுப்பியபோது அவன் தலைமையில் 4000 சிப்பாய்களும், சில குதிரைப்படைகளும் டச்சுப் போராட்டத்திற்கு எதிராகப் படை எடுத்துச் செல்ல வசதியாயிருந்தது. டச்சுக்காரரைத் தாக்கப் படை நடத்திச் சென்றான். அவனுடைய துருப்புகள் யாவும் பயிற்சி பெற்றவை; சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. எந்தப் பாளையக்காரனுக்கும் அல்லது பாளையக்காரர்களின் கூட்டுறவால் ஏற்பட்ட படைக்கும் அக்காலத்தில் மகமது யூசுபினுடைய படைக்கு இருந்ததைப் போன்று அவ்வளவு வாய்ப்புள்ள ஆதரவு இல்லை. மகமது யூசுபு மதுரை நாட்டை மேலும் சிறிது காலம் ஆட்சி செய்தான். அதன் காரணமாய்த் தன்னை மிக்க வலிமையுடையவனாக்கிக் கொண்டதாய்த் தெரிகிறது.

அரசாங்கத்தார் யூசுபுகானுக்கு எவ்வளவு சலுகை அளித்திருந்தபோதிலும் கூட 1762 இல் அவனுடைய எசமான நம்பிக்கையைப் பற்றிய ஐயம் அவர்களுக்கு ஏற்பட்டது என்று தெளிவாய்த் தெரிந்தது. அரசாங்கத்தினர் அவனை உடனே மதராசுக்குப் புறப்பட்டு வரும்படியும் அவனுக்குப் போதுமான பாதுகாப்பு அளிப்பதாகவும் கடிதம் எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் அவனோ அற்பமான மன்னிப்புகளை மட்டும் பதிலுக்கு அனுப்பி வந்தான். அது மட்டுமன்றி அரசாங்கத்தாரின் உடன்பாடின்றி அல்லது அவர்களுக்கு அச்செய்தியைத் தெரிவிக்காமலேயே திருவாங்கூர் அரசன் மீது போர் தொடுக்கத்தக்க துணிவும் அவனுக்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அவன் தன் கடந்தகால நடவடிக்கைகளுக்காக வருந்துவதாயும், எதிர்காலத்தில் கீழ்ப்படிதலுடன் இருப்பதாக வாக்குறுதி கொடுத்தும் மேலும் நான்கு ஆண்டுகட்கு மதுரை திருநெல்வேலி நாடுகளைத் தானே ஆண்டுக்கு 7 இலட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துக் கொள்வதாயும் தெரிவித்தான். அரசாங்கத்தார் இக்கடிதத்தை வாய்ப்பு தேடிக் கொள்ளத் தேவையான காலத்திற்காக எழுதப்பட்ட ஒரு சூழ்ச்சி என மதித்தனர். எனவே அதற்கு மேல் அந்த மாகாணங்களை அவனுடைய ஆட்சியின்கீழ் விட்டு வைக்க அவர்களுக்கு விருப்பமில்லை என்றும் அவன் உடனே எவ்வித நிபந்தனையுமின்றிச்