பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13 கால்டுவெல்

இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். மகாபாரத காலத்தில் தேவர்கள் தாமிரபரணி ஆறும் கடலும் சேருமிடத்தில் தவம்புரிந்தமை கூறப்படுவதே மக்கள் அந்த இடத்தில் புண்ணிய நீராடித் தவம் புரிந்தார்கள் என்று நான் முடிவுசெய்ய ஏதுவாகிறது. திருநெல்வேலியிலுள்ள நாகரிகமடைந்த மக்கள் முதன்முதல் அங்குள்ள கொற்கையிலேதான் குடியேறினார்கள் என்று தெரிகிறது. அங்கேதான் இந்த ஆற்றுக்குத் தாமிரபரணி என்னும் பெயர் வழங்கப்பட்டுப் புகழ்பெற்றது.

தாமிரபரணி என்னும் பெயரின் பொருளும் தோற்றமும்

தாமிரபரணி என்ற பெயரிலேயே அதன் பொருள் விளக்கமாய் உள்ளது. ஆனால், இந்த இடத்தில் அப்பொருள் பொருத்தமானதாய் இல்லை. ‘தாமிர’ என்பது சிவப்பு எனப் பொருள்படும். பரண என்பதிலிருந்து வந்த பரணி என்பது இலை - இலைகளையுடையது - அதாவது, தாமிரபரணி என்பது சிவப்பு இலைகளைக் கொண்ட ஒரு மரம் என்று பொருள்படலாம். ஆனால், இந்தப் பெயர் ஆற்றிற்கு ஆகி வருவது பொருத்தமாய் இல்லை. எனவே, ஏதாவது ஒரு நிகழ்ச்சியோ அல்லது கதையோ இப்பெயர் வரக் காரணமாய் இருக்க வேண்டு மென்பது தெரிகிறது. இந்தப் பெயரே இலங்கையில் பழம்பெயராய் இருந்தது என்பது கருதத்தக்கது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் முற்காலத்துப் புத்த மதத்தினரால் அது தம்பரபன்னி (Tambapanni) என்று வழங்கப்பட்டது என்பது ஜிர்னாரில் (Girnar) உள்ள அசோக மன்னன் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. மகா அலெக்சாண்டரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் தகவலறிவு பெறும் ஊக்கத்துடன் இந்தியாவைப் பற்றியும் அதிலுள்ள நாடுகளைப் பற்றியும், அந்நாட்டில் வாழும் மக்களைப் பற்றியும், அதன் அருகே உள்ள நாடுகளைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்தியாவை அடுத்துப் பெரியதொரு தீவு உள்ள தென்பதும் அதன் பெயர் தப்ராபனி (Taprobane) என்பதும் அறிந்தார்கள். தப்ராபனி என்பது தம்பாபன்னி (Tambapanni) என்பதன் தவறான உச்சரிப்பேயாகும். ‘அழகான தீவு’ என்ற (இலங்கு என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு விளங்கு என்ற பொருள் இருத்தல் கருதத்தக்கது - ந.ச.) பொருளில் லங்கா என்றே இலங்கை வழங்கப்பட்டிருக்கிறது. சிங்களம் என்று அதைப் பிற்காலத்துப் பெளத்த எழுத்தாளர்கள் குறிப்பிட்டார்கள். அச்சொல் சிகாளம் (Sikalam), சிலாம் (Silam), சிலந்திப் (Seஜ்endib), செரன்திப் (Serendib), சீலன் (Zeelan), சிலான் (Cayloun), சிலோன் (Ceylon) என்று காலப்போக்கில் வரிசையாக மாறுதலடைந்தது. (‘திப்’