பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215 கால்டுவெல்


அன்றியும் நவாபின் துருப்புகளில் பாதிபேர் வெறும் கூலிகள் என்றும் அவர்களது ஆயுதங்கள் மிகப் பாழடைந்து சரி செய்ய முடியாதபடி சீர்கெட்டிருந்தன என்றும் குறை கூறினான். அவர்கள் 4000 பேர் இருந்தார்கள். ஆனால் அதில் பாதிப்பேருக்கு மட்டும் பணம் கொடுத்து கம்பெனியால் பயிற்சி அளிக்கப்பட்டால் போதும். நாட்டில் நிலை இவ்வாறிந்தமையால் தபால் போக்குவரத்து நின்று விட்டது. வெளியூர்களிலுள்ளவர்களுக்குச் செய்தி அனுப்புவதற்கு அவன் மிகவும் திண்டாடினான். வடகரைப் படைகளுக்குத் தலைமை வகித்த என்சைன் பெளல்சம் (Ensegm Foulsum) பாளையக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட வாசுதேவநல்லூரைக் காப்பாற்ற முயன்றான். அவன் போய்ச் சேருவதற்குள் அப்படை தண்ணீருக்குத் திண்டாடித் தங்கள் படைகளுடன் திருநெல்வேலி திரும்பிவிட்டன. 12000 பாளையக்காரருடன் ஒரு சிறு மோதல் செய்துவிட்டு அவனுடைய கோட்டைக்குத் திரும்பினான். இக்கடிதம் கிடைத்ததும் அரசாங்கத்தார் தங்கள் படை எங்கெங்கு பின்வாங்கியதோ அங்கெல்லாம் சிறுசிறு பாளையக்காரர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர் என்பதை அறிய வருந்துவதாயும் தெரிவித்தனர். நாட்டில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி அவன் படைகளுக்கு ஊதியத்தைக் கையில் கொடுத்துவிட உடன்பாட்டால் அது அவனுக்கும் அவர் நாட்டிற்கும் நல்லது எனத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தனர். ஆனால் நவாபோ அதற்கு இதுவரை உடன்படாத போதிலும் இந்தத் திட்டத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய இன்றியமையாமையை அவர்கள் அவனுக்குத் திரும்பவும் எடுத்துக் கூறிக் கொண்டேயிருந்தனர்.

சில கலகக்காரப் பாளையக்காரர்களை அடக்க மேஜர் பிளிண்ட் (Major Flint) எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வி கண்டதுடன் 1766 ஆம் ஆண்டு கழிந்தது. டிசம்பர் 23 ஆம் தேதி அவன் கொல்லம்கொண்டான் கோட்டையைத் தாக்குவதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து புறப்பட்டான். 27 ஆம் தேதி உணவுப் பொருளுக்காக திருவில்லிப்புத்துருக்கு அனுப்பப்பட்ட வழித்துணைப்படையும் பாளையக்காரர்களால் தாக்கப்பட்டது. இவ்வழித் துணைக்கு உதவிசெய்ய ஒரு பலம் பொருந்திய படை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த துணைப்படையும் தாக்கப்பட்டது. இத்தாக்குதல் பாசறையிலிருந்து மூன்று மைல்களுக்குள்ளேயே தொடர்ந்தது. 29 ஆம் தேதி கோட்டைச் சுவரில் சிறிது பிளவு ஏற்பட்டவுடன் திடீர் தாக்குதல் செய்தனர். ஆனால் அந்த இடத்தை மிகுதியான எண்ணிக்கையுள்ளவர்கள் மிக்க உறுதியுடன் காத்து