பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217 கால்டுவெல்


சென்றான். அப்படையெடுப்பு எவ்வாறோ தவிர்க்கப்பட்டுவிட்டது. அச்சமயத்தில் உண்மையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கியதாகத் தெரியவில்லை. பாஞ்சாலங்குறிச்சிக்கு ஆங்கிலேயரின் தொடர்ந்த கடுமையான முற்றுகைகளின் முதல் தாக்குதல் 1767 இல் மேஜர் பிளிண்டினால் ஏற்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி ஒரு பெரிய மண்கோட்டை, அது தற்போது ஒட்டப்பிடாரத் (இந்த ஆண்டு நூற்றாண்டு பெறும் வ.உ.சி. பிறந்த ஊர் - ந.ச.) தாலுக்கா நகருக்கு அருகே அமைந்துள்ளது. ஒரு பாளையக்காரனின் தலைமையிருப்பிடமாயிருந்ததால் முழுப் பாளையமும் அப்பெயரால் அழைக்கப்பட்டது. பாஞ்சால என்பது பாஞ்சாலம் சம்பந்தப்பட்ட எதற்கும் பொருளாகும். தற்போது ஆற்றிடைப்பட்ட நிலம் (Doab) பஞ்சபாண்டவச் சகோதரர்களின் மனைவியாகிய திரெளபதியின் நாடு மகாபாரதக் கதையில் ஈடுபாடுடைய யாரோ ஒருவர் இந்த இடத்திற்கு இப்பெயரை வைத்திருக்க வேண்டும் (கால்டுவெல்லின் இவ்விளக்கம் இராமாயண பாரதக் கதைப் பெயர்கள் கொண்ட பிற இடங்கட்கும் பொருந்தும் - ந.ச). அப்பெயரின் இரண்டாவது பகுதி கிராமத்தைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்று. அது (குறிச்சி, குறிஞ்சி - ந.ச.) முக்கியமாகக் காடு அல்லது மலைகளிடையே இருக்கும் கிராமத்தைக் குறிக்கிறது. தற்போது அதற்கருகே ஒரு காடு இருந்ததற்கான அறிகுறி ஒன்றும் இல்லை. ஆனால் கடைசி பாளையக்காரர் போர் நடந்த காலம் வரை திருநெல்வேலிக்கு வடக்கே பருத்திக் கரிசல்மண் இருந்த இடம் முழுவதும் அடர்ந்த மரங்களால் மூடப்பட்டிருந்தது. இந்தக் காடுகளை வெட்டி வெற்றி காணச் செய்தது பருத்தியே (Cotton). பாளையக்காரரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்திராவிடில் பருத்திக் காடுகளைக் கடந்திருக்கவே முடியாது. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் ஒரு நாயக்கன். நாம் இப்பொழுது 1767 ஆம் ஆண்டிற்கும், மேஜர் பிளிண்டிடமும் திரும்பி வருவோம்.

1767 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொடர் நிகழ்ச்சிகள்

பிப்ரவரி 15 ஆம் தேதி மேஜர் பிளிண்டின் தயாரிப்புகள் முடிந்தன. தாக்குதலின் மூலம் பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்ற அவன் முயற்சி செய்தான். காலையில் கோட்டைக்கு எதிரே வெடிக்க ஆரம்பித்த பீரங்கி நாள் முழுவதும் நெருப்பைக் கக்கும்படி வைக்கப்பட்டது. நடுப்பகலில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்திற்கு முன் கொல்லம் கொண்டானில் ஏற்பட்ட இது எந்த விதத்திலும் வெற்றியளிப்பதாய் அமையவில்லை. கொலை