பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 220


அவன் கோட்டைக்குள் சுமார் 1000 காளை பொதிச்சுமை தானியம் இருப்பதையும் அறிந்தான். அதைவிட்டுச் செல்வதற்குமுன் அதைத் தரைமட்டமாய் அழித்துச் சென்றான்.'

கர்னலுடைய அடுத்த படையெடுப்புக்கு இலக்காகியதும், பெரும் ஏமாற்றத்தை விளைவித்ததும் சிவகிரியே. சேத்தூரிலிருந்து 10 ஆம் தேதி அங்கு சென்றடைந்தவுடன், அக்கோட்டை ஏற்கனவே கைவிடப்பட்டிருந்ததைக் கண்டான். அதைக் காத்துக் கொண்டிருந்தவர்கள் அவன் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ஓடி மலைகளில் பதுங்கி விட்டனர். அங்கு எதிரிகள் அடைந்த துன்பமான நிலைக்கு மிக்க வருந்தினான்.

1767 ஆம் ஆண்டு முதல் 1771 ஆம் ஆண்டு வரை

உண்மையில் அவர்கள் அதிகாரிகளை எதிர்த்ததற்காக மிக்க வருந்தித் தங்கள் குற்றத்தை உணர்ந்திருக்க வேண்டுமென முடிவு செய்தான். அத்தகைய எதிர்ப்பான குழப்பங்கள் நாட்டில் உண்டாகக் காரணம் பாளையக்காரர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட நவாப் அரசாங்கத்தின் கொடுமையும் அநீதியான ஆட்சியுமே என்று அவன் ஊகித்தான். 20,000 மக்கள் வசித்து வந்த சிவகிரியில் ஒரு மனிதரோ, பெண்ணோ அல்லது குழந்தையோ யாரும் காணப்படவில்லை. சிவகிரி கோட்டை சேத்துர் கோட்டையைவிடப் பெரியது; பலமுடையதும்கூட அவர்கள் வருவதற்குள் கோட்டைவாசிகள் வெளியேறாமலிருந்திருப்பின் அதைக் கைப்பற்றுவதில் சிறிது அழிவு ஏற்பட்டிருக்கும். ஐந்து ஆறு நாட்கள் அக்கோட்டைக்கருகே இருந்த பிரதேசங்களைக் கண்டு எவ்வளவு ஏங்கினான் என்பது அவன் அரசாங்கத்தினருக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிகிறது.

"இந்தச் செழிப்புமிக்க நாட்டை முழு நாசத்தினின்றும் காப்பாற்ற ஏதேனும் ஒரு வழியை நவாபு கடைப்பிடிக்க வேண்டுமென்று நான் மனப் பூர்வமாக ஆசைப்படுகிறேன். வேகமாகப் பலனுள்ள ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால், நான் இதுவரை கண்டிராத மிக அழகான அச்செழிப்புள்ள வயல்கள் அடுத்த ஆண்டில் வெறும் பாழ் நிலமாகிவிடும் என்பதை நினைக்க உண்மையில் எனக்கு வருத்தமாயிருக்கிறது.”

அவனுடைய அடுத்த கடிதம் வாசுதேவ நல்லூரிலிருந்து மே 28 ஆம் தேதி எழுதப்பட்டது. சிவகிரி கோட்டையைத் தரை மட்டமாக்கும் வேலையை மேஜர் பிளிண்டிடம் விட்டு விட்டு அவன் 13 ஆம் தேதி வாசுதேவநல்லூரை அடைந்தான். 17 ஆம் தேதி மேஜர் பிளிண்ட்