பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225 கால்டுவெல்

பம்பாய்க்குமிடையே ஏற்பட்ட தபால் போக்குவரவு:

1771 இல் அரசாங்கத்தினரால் அன்ஜன்கோவுக்கு அனுப்பும்படி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு படைத் தலைவனுக்குச் சென்னையிலிருந்து பம்பாய்க்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கடிதக் கட்டு அனுப்பப்பட்டது. அன்ஜன்கோ திருவாங்கூர் கடற்கரையிலுள்ள திருவனந்தபுரம் கொல்லம் இவற்றினிடையே உள்ள ஒரு சிறு நகரம். இந்நகரம், கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமானது. அங்கிருந்து கடல்வழியாக எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பம்பாய்க்கு அனுப்பப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடிதக் கட்டுகள் இதே போல் பம்பாயிலிருந்து மதராசுக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சுற்றுப் போக்குவரத்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நேரடியாக நடந்து வந்தது. ஏனெனில் அக்காலத்தில் மதராசுக்கும் பம்பாய்க்குமிடையேயுள்ள மாவட்டங்களில் சாதாரணநிலை பாதுகாப்புடையதாக இல்லை. ஹைதர்அலி, திப்புசுல்தான் மராட்டியர்கள் ஆகியவர்களால் ஏற்பட்ட சச்சரவுகள், சண்டைகளால் குழப்பமுற்றிருந்தது. உள்ளுர் - தபால் போக்குவரத்து அவ்வளவு சிறந்ததாக இல்லை எனினும் கடல் கடந்த தபால் போக்குவரத்துமிக்க வளர்ச்சியுற்றிருந்தது. உள்நாட்டுத் தபால் போக்குவரத்துகள் மிக்க வளர்ச்சியடையாதிருந்தன எனினும் அயல்நாட்டுத் தபால் போக்குவரத்து தொடங்கி வளர ஆரம்பித்தது. சென்னை அரசாங்கத்தினிடமிருந்து ஆட்சி இயக்குநர் (Court of Directors) களுக்கு வரும் அவசரக் கடிதங்களின் மறு நகல்கள் யாவும் அடிக்கடி பெர்ஷியன் குடாவிலுள்ள பஸாரா வழியாகவே அனுப்பப்பட்டு வந்தது. அங்கிருந்து வரும் கடிதங்களின் மறு நகல்களும் அதே வழியாகவே வந்து சேர்ந்தன.

வரலாற்று ஆசிரியரான ஓர்ம் அன்ஜன்கோவிலில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. (ஆரிய செய்தி! - ந.ச.)

1771 ஆம் ஆண்டு முதல் 1778 ஆம் ஆண்டுவரை

ஸ்வார்டி (Swarty) என்ற புகழ்பெற்ற மதபோதகரின் (பத்திரிகையில்) இதழில் 1771 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையைப் பற்றிய முதலாவது குறிப்பு வெளியாகிறது.

1772 இல் மதுரை திருநெல்வேலிப் பாளையக்காரர்களை, முக்கியமாக நாலுக்கோட்டை என்ற சிவகங்கை பாளையக்காரனை ஒடுக்குவதற்காக ஒரு படையெடுப்பு திட்டமிடப்பட்டது. (மருது பாண்டியர்க்கு முன்னிருந்த சிவகங்கை மன்னரும் மானமறவர் போலும்!