பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227 கால்டுவெல்


இப்படை சிவகிரியைத் தாக்கி அதை அடக்க முயற்சித்தது. ஆனால் அதன் முடிவைப்பற்றிய செய்தி கூறப்படவில்லை. ஒருவேளை வழக்கம்போல் தோல்வி, அதை அடுத்து ஓர் ஒப்பந்தமாய் இருந்திருக்கலாம்.

காப்டன் பிரெளனுக்குப் பின் காப்டன் எடின்ங்டன் (Captain Eidington) அப்பதவிக்கு வந்தான். ஆனால் அவனும் சீக்கிரத்திலேயே அதிகாரப் பதவியை விட்டுவிடும்படி கட்டளையிடப்பட்டான்.

1778-காப்டன் எடிங்டன் விலகியவுடன், காப்டன் பாரிங்டன் பாளையங்கோட்டைப் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டான்.

ஏப்ரல் ஆறாம் தேதி பாளையக்காரர்களிடம் பாக்கியிருந்த வரிப்பணத்தை வசூலிக்கத் துணை செய்ய ஐந்து கம்பெனி சிப்பாய்ப் படைகளை அனுப்பிவைக்கும்படி காப்டன் பாரிங்டன் உத்திரவிடப்பட்டான். அவர்களுடைய எதிர்ப்பின் போது அரசாங்கத்தாரின் விரைவு ஆணைகளின்றிப் படையைப் பயன்படுத்தக் கூடாதெனவும் ஏற்பட்டிருந்தது.

முஸ்லீம்கள் இந்துக்களுக்கு இயற்றிய கொடுமை

1779 – கர்னல் பிராய்து வெய்ட் (Colonel Braith Waite) திருநெல்வேலியைக் கடந்து செல்லும்போது நவாபின் ஆட்கள் மொகரத்தின் போது இந்துக்களுக்கு இயற்றிய கொடுமைகளைப் பற்றி அரசுக்கு அறிவித்தான். அவர்கள் ஒருசிலையைச் சுக்குகளாக்கி அநேக பார்ப்பனர்களைக் கொன்றனர். இதனால் வேளாண்மை மற்ற உற்பத்தி சாலைகள் மூடப்பட்டன. இந்துக்கள் நீதி கேட்டு வஞ்சம் தீர்க்க வற்புறுத்தினர். துணிவுள்ள திருநெல்வேலி பாளையக்காரர்கள் வசம் அநேக வலிமையான கோட்டைகள் இருந்தன. எனவே அவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தலாமென அவன் பயந்தான். மேலும் நவாபினுடைய பழைய பஸ்தார் புதிய பஸ்தார் இவர்களுக்கும் இந்து குத்தகைக்காரானாகிய தளவாய் முதலிக்கும் ஏற்பட்டிருந்த உட்பகைகள் காரணமாக நாடு கலக்கமுற்றிருந்ததெனவும் அவன் தெரிவித்தான். பிறகு கர்னல் பிராய்துவெயிட் போதுமான படையுடன், மலபார் கரையில் ஏற்பட்டிருந்த பயனற்ற நடவடிக்கைகளில் பங்ககொள்ளும் பொருட்டு அன்ஜன்கோவிலிருந்து தலைச்சேரிக்குக் கப்பல் ஏற அன்ஜன்கோ நோக்கிப் புறப்பட்டான். இந்துக்களுக்கு மகமதியர் இழைந்த அவமானங்களால் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் கர்னல் பாரிஸ்டன் படைக்குத் தேவையான உணவுகளைப் பெறுவது மிகக்