பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 228

கடினமாயிருக்கிறதென காப்டன் பாரிஸ்டன் பாளையங்கோட்டையிலிருந்து எழுதியிருந்தான். இந்த ஆண்டின் இறுதியில் காப்டன் எடிங்டன் பாளையங்கோட்டை படைத் தலைவனாய் திரும்பவும் நியமிக்கப்பட்டான்.

1780 - நவாபின் படைகளுக்கும் சிவகிரி பாளையக்காரனுக்குமிடையே ஒரு போர் நடந்ததாகக் காப்டன் எடிங்டன் அறிவிக்கிறார். எல்லாப் பாளையக்காரர்களும் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பற்றிருந்தமையால் வரிவசூலில் மிகப் பெரிய தொகை குறையலாயிற்று. சில பாளையக்காரர்களும் ஹைதர் அலியுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பதாக காப்டன் எடிங்டன் கண்டுபிடித்தார். இச்சமயத்தில் வில்லியம் லைட் (Mr. William Light) என்பவன் பாளையங்கோட்டையில் சம்பளம் கொடுப்போனாக இருந்தான். இவனால்தான் திருநெல்வேலியில் முதன்முதலில் வாசனைத் திரவியங்கள் பயிரிடுதல் புகுத்தப்பட்டது. அவன் கொழும்பிலிருந்து இரண்டு இலவங்கப்பட்டை இளஞ்செடிகளைக் கொண்டுவந்தான். திருநெல்வேலி நாட்டின் நிலை மிகவும் குழப்பத்திற்கிடமாயும் மனக்குறையுடையதாயுமிருப்பதால் சென்னை சபையின் (Council) தலைவர் இவ்விஷயத்தின் பொருட்டு நவாபை நேரில் காண வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார். நல்வினைப் பயனாய், மிக மனநிறைவான ஒரு ஒழுங்குமுறை நடைமுறையிலிருந்தமையால், அடுத்த ஆண்டு இறுதியில் அம்முறை புகுத்தப்பட்டது.

காப்டன் எடிங்டன் விலக்கப்பட்டான்

திருநெல்வேலி மிஷன் பதிவுப் புத்தகம் அல்லது பாளையங்கோட்டையிலுள்ள உள்நாட்டு கிறிஸ்தவர்களின் இருப்பிடப் பதிவுப் புத்தகம் 1780 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

1781 சிவகிரி பாளையக்காரன் ஹைதர் அலியைத் திருநெல்வேலி நாட்டிற்குள் படையை அனுப்பிவைக்கும்படி அழைப்பு விட்டிருப்பதாகக் காப்டன் எடிங்டன் அரசாங்கத்திற்கு அறிவித்தான். மதுரை - திருநெல்வேலியில் ஹைதர் ராஜாவினால் நியமிக்கப்பட்ட குதிரைக்குட்டி ராஜா (Colt Raja) குத்தகைக்காரன் ராஜா குடுமத்ராமின் நெருங்கிய உறவினனாயிருப்பதால் அவன் ஒளிவாக (இரகசியமாக) ஹைதர் அலி பக்கம் இருக்கிறான் என்று தெளிவாக அறிந்திருப்பதாக அவன் தெரிவித்தான். ஹைதரிடமிருந்து நாட்டைக் காப்பதற்குத் தேவையான வெகு சிறு அளவு உதவியே திருவாங்கூர்