பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235 கால்டுவெல்


திரும்புவதற்கான உரிமைக்காகவும் ஆங்கிலேயருடைய பாதுகாப்பிலிருக்கவும் நஷ்டஈடு செலுத்தப்பட வேண்டுமென்றும் புரோக்டாரிடம் முறையிட்டனர். அவன் அக்குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தான். அரசாங்கமோ அத்தகைய நடவடிக்கைகள் மிகக் குற்றமுடையவை என்று எண்ணி அந்த அதிகாரியைக் கோட்டையிலுள்ள அவனுடைய வேலையை மட்டும் கவனிக்குமாறு கட்டளைப் பிறப்பித்தது.

1782, ஏப்ரலில் அப்போது குத்தகைக்காரனாக இருந்த திருமோலிபா (திருமலையப்ப முதலி) தன் பேச்சைக் கேளாது காப்டன் கிபோயிங்ஸ் (Captain Giboings) அறிவுரையைக் கேட்டு அரசாங்க தானியங்களின் விலையை அநியாயமாக உயர்த்திவிட்டானென்றும், பாளையக்காரர்களுக்குத் தனதாயிருக்கிறானென்றும கமிட்டிக்குக் குற்றச்சாட்டுகளை எழுதினான். அவனுக்குப் பதிலாக ஒரு புது குத்தகைக்காரனை நியமிக்க வேண்டுமென்றும் வரிவசூலிப்பவராகிய தனக்கு அவன்மேல் எல்லா அதிகாரமும் இருக்க வேண்டுமென்றும் யோசனை கூறியிருந்தான். முதலில் அப்போதைய குத்தகைக்காரனுடைய மருமகனான தீர்த்தாரப்ப முதலியை நியமிக்கவும், மதுரையிலிருந்த அமீலாகிய ரங்கராவ் என்ற ஒரு ஆளைப் பின்னர் நியமிக்கவும் முன் மொழிந்திருந்தான். அப்போது குத்தகைக்காரனாக இருந்த திருமலையப்ப முதலி புரோக்டாரினுடைய செயல்களைப் பற்றிக் குற்றம் சாட்டிக் கமிட்டிக்கு எழுதியிருந்தான். கம்பெனியினினுடைய சரிஷ்டதாரும் ஒரு குற்றச்சாட்டை அனுப்பியிருந்தான். பிறகு புரோக்டாருக்கும் படைத்தலைவனான அதிகாரிக்கும் மிகக் கடுமையான தகராறு ஏற்பட்டது. திருநெல்வேலியிலுள்ள காப்டன் கிபோயிங்ஸ்சும் அவனுடைய மற்ற வேலைக்காரர்களும் வரிவசூல் விஷயத்தில் எவ்வித தலையீடும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று கமிட்டி உத்தரவிட்டது. ஆனால் மற்ற குறிப்புகளைப் பொறுத்தவரை புரோக்டாரின் சிபாரிசுகளைப் புறக்கணித்துவிட்டது. அதற்கு மாறாக அவன் கொடுக்கல் வாங்கல் விகிதத்தில் குறுக்கிட்டமைக்கும் அங்கு அவன் சென்றது முதல் வரிவசூல் செய்தமைக்கு எவ்விதக் கணக்கும் அனுப்பாமலிருந்தமைக்கும் குற்றம்சாட்டியிருந்தனர். எதிர்காலத்தில் அவன் மாதந்தோறும் கணக்குகளை அனுப்ப வேண்டுமென கட்டளையிடப்பட்டான்.

'உரிமை மாற்றத்தின் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் நிறைவேற்ற மேலும் சில ஒழுங்குகள் தேவை' என்ற முடிவுக்குக்