பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237 கால்டுவெல்


வேண்டுமென லார்ட் மகார்டினே (Lord Macartney) ஓர் ஆணை பிறப்பித்திருந்தார். அவ்வாணை வருமாறு:

வரி உரிமை மாற்றத் திட்டக் கமிட்டியினால் குறிக்கப்பட்ட திருநெல்வேலி மாநிலத்தின் நிலை அங்கு ஒருவரை அனுப்பும்படி எங்களைத் தீர்மானிக்கத் தூண்டியது. அந்த ஒருவர், நடைமுறையில் இயன்றவரை வரிவசூல் தொல்லைகளில் ஏற்பட்ட மனவேறுபாடுகளையும் கலகங்களையும் தீர விசாரித்து அவற்றை அறவே ஒழித்துவிடும் வேலையை நம்பி ஒப்புவிக்கத் தக்கவராயிருத்தல் வேண்டும். உங்களுடைய உற்சாகம், திறமை இவற்றிலுள்ள எங்கள் நம்பிக்கையினால் மட்டுமன்றி, கமிட்டியினால் முன்பு சிபாரிசு செய்யப்பட்டபடி கர்நாடகத்திலுள்ள வெவ்வேறு மாவட்டங்களிலும் முக்கியமாகக் கமிட்டியின் ஆரம்ப ஏற்பாட்டின்படி அதன் உறுப்பினர் அப்போதைக்கப்போது சுற்றுப் பயணம் செய்யும் படி எங்களுக்குக் கமிட்டி யோசனை கூறியிருப்பதாலும் இந்த வேலைக்குத் தங்களை நியமிக்கிறோம்.

திருநெல்வேலியிலிருந்து அவர்களுக்கு வந்த குற்றச் சாட்டுகள் எதிர் குற்றச்சாட்டுகள் இவற்றுள் எது மிக முக்கியமான விசாரணைக்குத் தகுந்தது என்று உறுதிப்படுத்த அரசாங்கத்தினரால் இயலவில்லை. ஆயினும், திரு. இர்வின் அங்கு சென்று சேர்ந்ததும் எந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த நியாயமான ஆதாரமிருக்கிறதோ அதை நன்றாகத் தீர விசாரிக்கும்படி பரிவுரை செய்தனர். சிறப்பாகப் பழைய குத்தகைக்காரன் தானிய அளவை, பண கொடுக்கல் வாங்கல் காரியங்களில் தகுதியற்ற செல்வாக்கைப் பயன்படுத்தியது தொடர்பாகத் திரு. புரோக்டாருக்கு எதிராக எழுதியிருந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி கூறினர். பாளையக்காரர்களின் உடைமைகளைப் பொறுத்துத் தகுதியான விகிதத்தில் மாறுதலுக்குட்படாத ஒரு குறிப்பிட்ட கப்பத்தொகையைப் பாளையக்காரர்கள் கட்டுவதற்கான முறைகளைச் செய்யும்படி இர்வினுக்குப் பரிந்துரை செய்தது. மேலும் விவசாயிகள் மீது குத்தகைக்காரர்கள் சாட்டும் குற்றங்கள், குத்தகைக்காரர்கள் மீது விவசாயிகள் கூறும் குற்றச் சாட்டுகள் இவைகளையும் விசாரித்துச் சரிசமமான நீதி வழங்கும்படியும் கூறினர். நாட்டின் நலத்தையும் நாட்டுச் சீர்திருத்தங்களையும் முன்னேற்ற, திருநெல்வேலியில் பொதுவாக இருக்கும் நிலையைப் பற்றிய செய்திகளைக் கூடுமான வரை முயன்று பெறும்படி கட்டளையிடப்பட்டான். நாட்டின் இயற்கையான விளைபொருள்களை உற்பத்தி செய்யும் முறைகளைச்