பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 238


செம்மைப்படுத்த முடியுமா என்றும் முக்கியமாக வாசனைப் பொருட்கள் உற்பத்தி செய்தலைக் கூடுதலாக்க முடியுமா என்றும் அவர் ஆராய்ந்தறிய வேண்டும். முத்துக் குளித்தலின் பயன்கள், தூத்துக்குடி வாணிபம், மன்னார்குடாவிலுள்ள குடியேற்ற நாடுகள் இவைகளைப் - பற்றியும் தீர விசாரித்தறிய முயற்சிக்க வேண்டும். திரு. லைட் (Light)க்கு அணைகளைச் சீராக்கும் திட்டங்களை மேற்பார்வையிடும் படி அனுப்பப்பட்ட ஆணை உட்பட, மற்றவர்களுக்கு முன்பே அனுப்பப்பட்ட வரிவசூல் தொடர்பான எல்லா ஆணைகளையும் இர்வினுக்கு மாற்றிக் கொடுக்கும்படி செய்தனர். ஏனெனில் நாட்டின் நடவடிக்கைகளில் திருநெல்வேலியிலுள்ள வேறெந்த கனவான்களும் தலையிடுவதற்கான உரிமை கொண்டாடுதலை அரசாங்கம் மதுரையிலுள்ள எல்லா இராணுவ அதிகாரிகளும் எந்த நெருக்கடியிலும் அவனுக்குக் கீழ்ப்படியும் படி உத்தரவிடப்பட்டிருப்பதாலும் அங்கு வேறு ஒருவரும் அதிகாரியாக நியமிக்கப்படாததாலும் இர்வினே திருநெல்வேலியைக் கவனிப்பது போல மதுரையையும் பொதுவாகப் பார்வையிட உத்தரவிடப்பட்டார். நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது அவனுக்குத் தக்க வழித் துணைகளை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அன்றியும், தஞ்சாவூரிலுள்ள ஜான் சுலைவன் நேர்மையும் பட்டறிவும் மிக்கவராதலின் பெருமைவாய்ந்த அவருடைய ஆலோசனைகளைக் கடிதம் மூலம் ஏற்றுக் கொள்ளும்படியும் அரசாங்கத்தினர் அறிவித்திருந்தனர். திரு. சுலைவான் அப்பொழுது தஞ்சாவூர். மறவர் நாடு, திருச்சிராப்பள்ளி இவற்றின் வரி உரிமை மாற்றுத் திட்டத்தின் மேற்பார்யைாளர். மறவர் நாடு, இராமநாதபுரத்தையும், சிவகங்கையையும் குறிக்கும். இறுதியாக அவர்கள் அவனுக்கு அன்றாட செலவுக்காகத் திருநெல்வேலி வரிவசூலிப்பவராகிய திரு. புரோக்டாருக்குக் கொடுத்தது போல் ஏழு பகோடாக்கள் கொடுப்பதாகவும் அவனுடைய உதவியாளனுக்குப் படைத் தலைவன் ஊதியமும் படிச்செலவும் கொடுப்பதாகவும் கூறினர்.

மற்றொரு கடிதத்தில் தூத்துக்குடி மக்களான பரவர்களின் குறைகளைக் கவனிக்குமாறு ஆணையிடப்பட்டான். பரவர் தலைவனாகிய ஜாதித் தலைவனுக்கு கெளரவ உடுப்பு ஒன்றைச் சென்னை அரசாங்கத்தின் சார்பில் பரிசளிக்குமாறும் அறிவிக்கப்பட்டான்.

பம்பாய்க்குச் சென்று கொண்டிருந்த கம்பெனிக் கப்பலிலிருந்து இர்வின் அஞ்சன் கோவிலில் இறங்கி, அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு மார்ச் 4 ஆம் தேதி சென்றார். திருவாங்கூர்