பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

247 கால்டுவெல்

 தன்மையை இப்போர் நிலை நாட்டியது. காட்டை மறைத்துக் கொண்டிருந்த அரணுக்கு எதிராக ஐரோப்பியர்களும் நான்கு சிப்பாய்ப் பட்டாளங்களும் நகர்ந்து தாக்குதலை ஆரம்பித்தனர். பாளையக்காரர்களோவெனில் தங்கள் முழுப் பலத்தோடு எங்களை எதிர்த்தனர். அரணை அடையும்வரை துருப்புகள், நெருப்பு சுவாலையிலும் கூடத் தங்கள் தோள்களிலிருந்து துப்பாக்கிகளை இறக்கவே இல்லை. அங்கு அவர்கள் பொதுவாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த எதிரிகள் மீது பாய்ந்தனர். இந்த முன்னேற்றத்தின் பலத்தில் நாங்கள் உச்சியைக் கைப் பற்றிவிட்டோம். பாளையக்காரர்கள் அடுத்துள்ள காட்டின் எல்லையில் புகுந்து கொண்டு எங்களை முன்னேறவிடாது எதிர்த்தனர். இதனால் இரு திறத்தினருக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது.

வேவு பார்த்து வந்தபின்னர், காம்பேக்குள் முன்புறமாக நுழைய முடியாது எனக் கண்டோம். ஆகையால் மேற்குப் பக்கத்தில் காம்பேயின் எல்லையாக அமைந்துள்ள மலை அடிவாரம் வரை மூன்று மைலுக்கு அடர்ந்த காடுகளின் வழியே பாதையமைக்க முனைந்தோம். முன்னோடிகளாகிய என்சைன், கன்னிங்காம் (Ensign, Gunningham) இருவரும் விடாமுயற்சியுடன் உழைத்தனர். 102வது அணியின் காப்டன் கார்டினர் (Gardinor) ஐரோப்பியர்களுடன் அவர்களுக்கு உதவி செய்தான். காப்டன் பிளேகர் (Blacker) மூன்றாவது, 24வது கர்நாடகப் பட்டாளங்களின் உதவியுடன் செப்பனிடப்பட்ட பாதையில் உடனுக்குடன் மிக்க வேகமாகப் பீரங்கிகளைக் கொண்டுவந்து சேர்த்தான். பின் புறமிருந்து துருப்புகளால் இது பலப்படுத்தப்பட்டு முன்னேறியிருந்தவர்களுடன் தொடர்பு உண்டாக்கியது. இந்தக் காரியத்திற்காக வேறு இரு படைகள் காட்டுக்குள் நிறுத்தப்பட்டன. நாங்கள் அரணை அடைந்தவுடனேயே பட்டாளமும் அதை அணுகி எங்கள் தாக்குதலைப் பலப்படுத்தியது. எட்டு ஆயிரம் பாளையக்காரர்களால் உண்டாக்கப் பட்ட தனியாத நெருப்பின் ஊடே எங்கள் வழியைத் தொடர்ந்து சென்றோம். பாளையக்காரர்கள் அடிக்கடி எங்கள் முன்னோடிக் கூட்டத்தை நெருக்கி அவர்களைத் தாக்கும் அணியின்மேல் மோதி வேலெறிந்து துப்பாக்கிகளை இழுத்து வந்த குதிரைகளைத் தட்டிவிட்டு எங்கள் மக்களில் அநேகரைக் கொன்றனர். ஆனால் மிக்க முயற்சியுடன் அவர்களுடைய தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கினர். சூரியன் மறைவதற்கு முன் நேராக மலைக்கே பாதையை அமைத்துவிட்டோம். அது மிக உயரமாயும் பாறையாயும் அநேக இடங்களில் மிக செங்குத்ததாயும் இருந்தது. எதிர் பாராத இந்தப் பகுதியிலிருந்து தாக்க முடிவு செய்யப்பட்டதால், துருப்புகள் அவ்வேலையை மேற்கொண்டு, தொடர்ந்து மலை உச்சியை அடைந்தது. நாங்கள் எல்லோரும் அதிக நேரம் துப்பாக்கி வெடித்து அந்த