பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249 கால்டுவெல்


தகுதியானதாக அவர் கருதிய நிபந்தனைகளை எனக்கு அனுப்பி வைத்தார். இந்தத் தலைவர்களிடமிருந்து வக்கீல்கள் என்னைத் திருமங்கலத்தில் சந்தித்தனர். (மதுரையிலிருந்து தென்மேற்கில் 12 மைல் தூரத்தில் உள்ளது). (கால்டுவெல் ஊர்களின் தொலைவுகளையும் உணர்த்துவது போற்றத்தக்கது - ந.ச.) அங்கு எல்லா உரிமைகளுக்கும் ஈடாகத் தலைக்கு முப்பது ஆயிரம் சக்கரங்கள் கொடுப்பதாக அவர்களுடைய தலைவர்கள் சார்பில் பேரம் பண்ணினார்கள். அதே போல் அவர்களுடைய கோட்டைகளை மீட்பதற்கு ஈடாகப் பதினைந்து ஆயிரம் பகோடாக்கள் அல்லது 6000 பவுன்களை ஒவ்வொருவரும் கொடுத்தார்கள். மேலும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிலுள்ள தற்காப்புச் சாதனங்கள் யாவும் அழிக்கப்பட வேண்டுமென்றும், அங்குள்ள துப்பாக்கிகள், மருந்து சாமான்கள், வெடிமருந்துகள் யாவும் பாளையங்கோட்டைக்கு அகற்றப்பட வேண்டுமென்றும் சிவகிரி காம்பே வரை நாங்கள் போட்ட பாதையை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்றும் அங்குள்ள தற்காப்பு வசதிகள் அகற்றப்படவேண்டுமென்றும் தென்படைத்தலைவர்களும் கம்பெனித் துருப்புகளும் எல்லாச் சமயங்களிலும் அவர்களுடைய கோட்டை, அரண் இவைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அவர்களை நெருக்கிப் பிடித்து உடன்படச் செய்தேன். முடிவாக அவர்கள் உயிரையும் உடைமைகளையும் வாரிசுகளையும் காப்பாற்ற விரும்பினால் மிக்கப் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அச்சுறுத்தலுடன் விவகாரத்தை முடித்தேன். கோட்டைகளையும் கைதிகளையும் (கைதிகளுள் கட்டபொம்ம நாயக்கனுடைய மகளும் இருந்தாள். நூற்றுக்கணக்கான மற்ற கைதிகளைப் போலவே அவளும் மிக்க கவனிப்புடன் நடத்தப்பட்டாள்) திருப்பிக் கொடுக்க ஏற்பாடாகவே, 3-வது 9-வது பட்டாளங்களை மாக்கின்னன் (Captain Mackinnon) தலைமையில் சிவகிரியை நோக்கிச் சென்று திண்டுக்கல்லில் என்னைச் சந்திக்குமாறு கட்டளையிட்டேன். அங்கிருந்து நான் மதுரை வழியாகப்புறப்பட்டேன்.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கர்னல் புல்லர்ட்டன் மறுமுறை திருநெல்வேலிக்குச் சென்றான். ஆனால் இந்த முறை திப்பு சுல்தானை எதிர்க்கத் தயார் செய்து கொண்டிருந்த படைக்கான பண வசூலை விரைவு படுத்தவும் படைகள் செல்லத்தக்க வழிகளைச் சரிசெய்வதற்காகவும் சென்றான்.

அக்டோபர் 26ஆம் தேதி கட்டபொம்ம நாயக்கன் சிவகிரி பாளையக்காரன் இருவரும் அடைக்கலம் அடைந்து விட்டதாக இர்வின் குறிப்பிடுகிறார். 1875 இல் நாட்டின் நிலைமையை ஆராய்ந்து வெளியிடப்