பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251 கால்டுவெல்


தக்கது. - ந.ச.)

அக்டோபரில் கர்னல் புல்லர்ட்டனால் தண்டனைக்குரியவர்களாகக் குறிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, சிவகிரி பாளையக்காரர்கள் கப்பம் செலுத்துவதில் இன்னும் தவறாமலிருக்கிறார்கள். மற்ற பாளையக்காரர்களும் அதேபோல் ஒழுங்காகக் கட்டுவார்கள் என நம்புவதாய் அவர் தெரிவித்திருந்தார்.

1785 இல் சுவார்ட்ஸ் (Swartz) தான் கட்டிய திருக்கோயிலை (Church) உரிமைப்படுத்துவதற்காகப் பாளையங்கோட்டைக்குச் சென்றார்.

தூத்துக்குடியையும், அதைச் சார்ந்த இடங்களையும் டச்சுக்காரர்கள் சார்பில் டச்சு கவர்னராக வந்த திரு.மெக்கர்ன் (Mr. Meckorn)னிடம் ஒப்படைக்குமாறு பாளையங்கோட்டைதலைவனான காப்டன்பில்கிளிப் (Captain Bilcliff)க்குக் கட்டளை இடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் சார்பில் நாளடைவில் செய்யப்பட்ட காரியங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1783இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் திரு. ஒக்ஸ் (Mr. Oakes) சுக்குப் பதிலாக திரு.டோரின் (Mr. Torin) சம்பளம் வழங்கும் (பட்டுவாடா செய்யும்) பணியை ஏற்றார். அதற்குப் பின்னர் சம்பளம் வழங்கும் (பட்டுவாடா செய்யும்) பணியில் எப்பொழுதும் பொதுமக்களே நியமிக்கப்பட்டு வந்தனர்.

வரிவசூல் உரிமையை ஒப்படைத்தல்

இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சி-திருநெல்வேலி உட்பட நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல தொல்லைகளுக்குத் தோற்று வாயாக இருந்து வந்த நிகழ்ச்சி-நாட்டு வரிவசூல் உரிமை நவாபிடம் ஒப்படைக்கப்பட்டதே ஆகும். இந்நிலை காரணமாய் கம்பெனியின் சிவில் நிர்வாகத்தினால் ஏற்பட்ட நன்மைகள் ஏழு ஆண்டுகள் இல்லாமல் போயின. சென்னை அரசாங்கத்தாரின் பயனற்ற மறுப்புகளுக்குப் பிறகு வரிவசூல் உரிமை ஒப்படைப்பு ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்றது. அதிலிருந்து வரியுரிமை மாற்றக் குழுவின் நடவடிக்கைகள் முடிவடைந்து, குழுவும் கலைக்கப்பட்டது. சூலை 5 ஆம் தேதியிலிருந்து அவர்கள் பெற்றுவந்த தனிப்பட்ட சலுகைகளை நிறுத்திவிடுவதாகவும் ஆனால் எல்லாக் கணக்குகளும் ஒரு வகைப்படுத்தும்வரை எல்லோரும் குழு கூட்டத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. அவர்களுடைய ஆர்வமுள்ள தொண்டுகளுக்குத் தலைமை அரசு நன்றி பாராட்டியது. வரிவசூல் உரிமையை விட்டுக் கொடுத்ததை உண்மையில்