பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 254


தாயிற்று. சரியான சூழ்நிலையில், கர்னல் புல்லர்ட்டன் தலைமையில் முக்கியமான இரண்டு பாளையக்காரர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட படையெடுப்பு மற்றெல்லாரையும் கீழ்ப்படியச் செய்துவிட்டது. இதை அடுத்து ஏற்பட்ட உடன்படிக்கையின் நேர்மையானது அவர்களுடைய பணிவைக் கம்பெனி அரசாங்கத்திடம் உண்மையான நம்பிக்கையாக மாற்றியது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மற்றொரு பத்தியில் 'நவாபிடம் வரிவசூல் உரிமையைத் திருப்பிக் கொடுத்த சில நாட்களுக்குள்ளாகவே முன்பு நடந்தது போலவே குத்தகைக்காரர்களின் நிரந்தர உரிமைக்கான விலையாக வெவ்வேறு குத்தகைக்காரர்களிடமும் முன்பணம் கேட்டும், தனக்கு வரவேண்டிய திறைப் பணத்தை எதிர் நோக்கி அந்தப் பணம் கடன்வாங்கியும் ஆட்சி செலுத்தத் தலைப்பட்டுவிட்டான். கடன் தொகைக்கான வட்டி கட்டிட வேண்டியிருந்ததுமட்டுமின்றி, நாட்டின் வருமானத்திலிருந்தே குத்தகைக்காரர்கள் இத்தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிக அதிகார வலிமையையும் கண்டு அவர்கள் நவாபின் கட்டளைக்கு மறுப்புக் கூறிவிட்டனர்' என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

வரியுரிமை மாற்ற காலத்தில் ஏற்பட்ட குறைந்த செலவையும் நவாபு அரசாங்கத்தினுடைய ஆடம்பர செலவையும் ஒப்பிடுவதில் அவர்கள் முனைந்தனர். அடக்குவாரற்ற அதிகாரம் அவர்கள் கைக்கு வந்ததும், நவாபின் தனிப்பட்ட சொந்தச் செலவுகளை ஆண்டுக்கு 13½ இலட்சம் பகோடாக்களிலிருந்து 2 இலட்சம் பகோடாக்களுக்குக் கூடுதலாகச் சுருக்கிவிட்டனர். அவர்கள் வரிவசூல் காலத்தின் போது-போர் நடைபெற்ற காலத்திலும் கூட ஏற்பட்ட செலவுகள் மொத்த வரிவசூல் தொகையில் 11 சதவீதத்துக்கு அதிகமாகவில்லை.

இவ்விவரங்களோடு கீழ்க்காணும் விவரத்தையும் பிற்சேர்க்கையாக நான் சேர்த்துள்ளேன். வரியுரிமை மாற்றம் ஒப்படைக்கப்பட்டபின், திரு.இர்வின் 1785-இல் இம்மாவட்டத்தைவிட்டு வந்த பின் இருந்து வரி வசூல் உரிமை ஏற்புக் காலத்தொடக்கம் வரை - 1790-இல் திரு. டூரினுடைய (Mr. Torin) நிர்வாகம் தொடங்கிய வரை-திருநெல்வேலி நாட்டில் ஏற்பட்ட ஒழுங்கற்ற நிலைகளைப் பற்றித் திரு. லூஷிங்டனால் கொடுக்கப்பட்ட விவரம் வருமாறு:

'இந்தச் செய்திகளை அறிந்தபின் நாட்டுமக்கள் கடந்த கால கம்பெனி நிர்வாகத்தை நினைவுகூர்ந்து அது ஒப்பீடான இன்ப காலம் என்று எண்ணுவது மிக இயல்பானதே. அக்காலத்தோடு கொடுமை நிறைந்த அடமான முறை, விற்பனை முறை பழக்கத்திலிருந்த இக்கடிபார்கானின்