பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 256


கம்பெனி அரசின் ஆக்கிரமிப்புக் காலம்

கர்னல் பிரிட்ஜஸ் (Bridges) பாளையங்கோட்டை படைத்தலைவனாக இருந்தான். சொக்கம்பட்டி பாளையக்காரர் கோட்டை கட்டி அதில் படைக்கலன்களையும் வெடிமருந்துகளையும் திரட்டி வைத்திருந்தான். அவனுக்கு எதிராகச் சண்டை செய்யத் தென் காஞ்சியில் (தென் காசி) ஒரு பெரும்படையை நவாபினுடைய பஸ்தார் திரட்டி வைத்திருப்பதாக பிப்ரவரியில் அறிவித்தார். தென்காஞ்சி என்பது சரியானபடி தென்காசி எனப்படும். அதாவது தெற்கே இருக்கிற காசி. மதராஸ் அரசாங்கத்தின் இசைவின்றி பஸ்தார் எந்தவிதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்கக் கூடாது என்று கர்னல் பிரிட்ஜஸ் கூறினார்.

1788-அப்போது டச்சுக்காரர்களுக்குச் சொந்தமாயிருந்த இடங்களாகிய தூத்துக்குடியிலிருந்து கொச்சிக்கு ஒரு டச்சுப்படை அணி வகுத்துச் சென்றது. அவர்கள் திருவாங்கூர் கொச்சி இவைகளின் எல்லை வழியாகச் செல்லும்போது திப்புசுல்தான் படையைச் சந்திப்பதைக் கவனமாய்த் தவிர்த்தல் வேண்டுமென எச்சரிக்கப்பட வேண்டுமென்று மதராஸ் கவர்மென்டு அறிவுரை நல்கியது. வட திருவாங்கூர் பகுதியில் அடுத்து வந்த ஆண்டில் திப்புவின் தாக்குதல் ஏற்பட்டது.

1789-ஜனவரியில் திரு. ஒக்ஸ் விலகினார். முன்பு அவருக்காகத் தற்காலிகமாய் வேலைபார்த்து வந்த திரு. டோரின் அந்த இடத்திற்கு சம்பளப் பட்டுவாடா அதிகாரியாகவும் பண்டகசாலையாளராகவும் நியமிக்கப்பட்டார். திரு. டோரின் பாளையங்கோட்டையில் ஒரு பகுதி நிலத்தை இலவங்கப் பட்டையைப் பெருமளவில் பயிரிடுவதற்காகத் தனக்கு வேண்டுமெனக் கேட்டார். அவர் கேட்ட ஒரு பகுதி நிலம் நவாபு தோட்டத்திற்கும் கம்பெனியாரின் தோட்டத்திற்கும் அருகே அமைந் திருந்தது. அது சம்பளப் பட்டுவாடா அதிகாரி வீட்டிற்கு வெகு அருகாமையிலும் இருந்தது. மரபுப்படி இந்த இலவங்கப்பட்டைத் தோட்டம் தற்போது நீதிபதியின் வீட்டிற்கு வடகிழக்கில் நெல் சாகுபடி செய்திருக்கின்ற நிலப்பகுதிக்கு ஈடானது. இந்த இலவங்கப்பட்டைப் பயிரிடுதலைத் தொடங்கியது, இதற்கு முன்பு சம்பளப் பட்டுவாடா அதிகாரியாயிருந்த திரு. லைட் (Light) (1780ஐப் பார்க்க). இந்த ஆய்வு இதற்குமுன் பயிரிட்ட பயன் போலவே மிக்க பயன்தரத்தக்க ஒன்றாக இருந்தது. திரு. லைட் இலங்கையிலிருந்து கொண்டுவந்த இரண்டு மரங்களிலிருந்து இப்பொழுது அதிக மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. இலவங்கப்பட்டை மரங்களைப் பாளையங்கோட்டை ஆற்று வண்டல்மண் பகுதியில் பயிரிட்டால் வளமுறச் செய்வது எளிது. ஆனால் அவ்வளவு வெப்பமும் வரட்சியுமான காலநிலை வேறுபாடுள்ள