பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

267 கால்டுவெல்


1798: கயத்தாறு, துருப்புகளின் தங்குமிடமாக இல்லாமல் போயிற்று. காப்டன் பானர்மன் அவனுடைய படையுடன் சேரும்படி கட்டளையிட்டார்.

1799: இந்த ஆண்டு தொடக்கத்தில் காப்டன் (தற்போது மேஜராக இருக்கும்) பானர்மன் திப்புசுல்தானுக்கு எதிராக அனுப்பப்பட்ட இறுதிப் படையெடுப்பில் அவனுடைய படையுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆனால் திருவாங்கூர் அரசருடன் உடன்படிக்கை பேசும்படியாகவும் பம்பாயிலுள்ள படைக்குத் தேவையான கால்நடை சேகரிப்பு மற்ற தேவையான சாமான்களைத் தேடுதல் முதலிய பணிகளுக்குப் பொறுப்பளிக்கப்பட்டான். அவன் தற்காலிக திருவாங்கூர் ரெசிடென்டாக 250 பகோடாக்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்பட்டான். பாளையக்காரர்களை எதிர்த்து அவன் படையெடுப்பு திருநெல்வேலியில் இந்த ஆண்டின் முற்பகுதியில் திப்புசுல்தானின் வீழ்ச்சிக்குச் சில காலத்திற்குப் பின் தொடங்கிற்று.

1799 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி லூஷிங்டனுக்குப் பின் ஜாக்சன் திருநெல்வேலி கலெக்டரானார். அவன் காலத்திய நிகழ்ச்சிகள் அடுத்த இயலில் கொடுக்கப்பட்டுள்ளன.