பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

271 கால்டுவெல்


செயின்ட் ஜார்ஜ் கோட்டை கவர்னர் ஆணையின்மேல் 1801 ஜூலை 31 ஆம் தேதி ஆலோசனைக் குழுவினால் நவாப் கர்நாடகம் முழுவதையும் இறுதியாகக் கம்பெனியிடம் ஒப்புவித்தபோது அவர் தென் பாளையப் பேஷ்குஷ்களின் கலெக்டர் என்று முகவரியிடப்பட்டார். ஆனால் அலுவலர் நியமனப் பத்திரத்தின் இடைப்பகுதியிலே திருநெல்வேலி மாகாணத்தின் கலெக்டர் என்ற பதவி அளிக்கப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி கலெக்டர் என்ற பதவிப் பெயரும் இருந்தது. 1781இல் தாசில்தாரர்களைப் போன்ற சுதேசி கீழ் அதிகாரிகளின் ஒரு வகுப்பினருக்குக் கலெக்டர் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. ஐரோப்பிய சிவில் அதிகாரிகள் ரிசீவர் (Receiver) என்று அழைக்கப்பட்டார். கீழ் அதிகாரிகள் வசூலித்தனர். தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். நவாபு செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை ஒழுங்காகச் செலுத்தினான். ஆனால் அவன் கடன் தொகைகளைச் சரி செய்யப் பெருந்தொகை கடன் வாங்கினான். இக்கடனைத் தீர்க்க நாட்டின் பல மாகாணங்களின் வரிவசூலைக் கடன்காரர்களிடம் ஒப்படைத்தான். 1781 இல் கம்பெனிக்கு வரிவசூல் உரிமை கொடுக்கப் பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் பொறுப்பற்ற தனி மனிதர்களிடம் நாட்டின் வரிவசூலை ஒப்படைத்தல் முறையற்ற நிகழ்ச்சி: அன்றியும் அச்செய்கை அநீதியையும் துன்பத்தையும் விளைவிக்கக் கூடியதாயிருந்தது.

1792இல் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி திட்டங்கள் எதுவும் சரிவர நடைபெறவில்லை. அவற்றின் குறைபாடுகளைத் தவிர்க்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று திருநெல்வேலியில் திசைக்காவல் தலம் காவல் வசூலை ஒழுங்கு படுத்துவதற்காகத் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்த ஒழுங்கு முறையாகும். 1795இல் தென் பாளையக்காரர்கள் முக்கியமாகத் திருநெல்வேலி மதுரைப் பாளையக்காரர்கள் விஷயமாக நவாபுடன் மனநிறைவான ஒழுங்கு நடவடிக்கை செய்து கொள்ள, சென்னை அரசாங்கம் முயற்சித்தது. வரி விதித்தல், வசூலித்தல் பாளையக்காரர் பேஷ்குஷ்களைக் கைப்பற்றல் இவற்றின் அதிகாரங்களை உடன் படிக்கையின்படி கம்பெனி அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும் ஆட்சி உரிமை நவாபிடமிருக்கும் வரை அரசாங்கத்திற்கு சிறு நன்மை கூட உண்டாகவில்லை. அப்பொழுது சென்னை கவர்னராக இருந்த ஹோபார்ட் பிரபு (Lord Hobert) தன்வழிக்கு நவாபின் உடன்பாட்டைப் பெற பலமுறை முயன்றும் பயனற்றுப் போகவே 'குதிரைப் படைக்கடன்' என்ற கடனைத் தீர்ப்பதற்காகத் திருநெல்வேலி மாவட்டத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் எண்ணத்தைத் தெரிவித்தான். ஆனால் சுப்ரீம் அரசாங்கம் இதற்கு அங்கீகாரம் அளிக்க