பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 272


வில்லை. இதைப் பற்றிய மேற்கண்ட விவரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பைப் பார்க்கவும்.

நாளடைவில் சீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டவுடன் காலஞ் சென்ற மகமது அலியும் அவனுடைய மகனுமாகிய இரு நவாபுகளும் திப்புசுல்தானோடு இராசத் துரோகமாக கடிதப் போக்குவரத்து ஏற்பட்டதைக் கண்டுபிடித்தவுடன், பிரிட்டிஷ் அரசாங்கம் நவாபின் குடும்பத்திற்கான வசதிகளைச் செய்து விட்டு, கர்நாடகத்தையும் அதன் அரசியல் நிர்வாகத்தையும் கைப்பற்றத் தீர்மானித்தது. 1801 ஜூலை 31 ஆம் தேதி முகமது அலியின் பேரனுடன் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையின் மூலம் இது செயல்படுத்தப்பட்டது. அந்த மகிழ்ச்சி நன்னாளில் 57 ஆண்டுகள் நடந்த போராலும் 20 ஆண்டுகள் நடந்த உடன்படிக்கையாலும் சாதிக்க முடியாத செயல்களைப் பேனா முனையின் சிறு கீறல் சாதித்துக் கொடுத்தது. (ஐட்சன் உடன்படிக்கைகளும் நியமனங்களும் Aitchison's Treaties and Engegements) என்பதைப் பார்க்க.

பாளையக்காரர்களின் இறுதிப் போருக்கு முன் நிர்வாக நீதிபதிகளாகக் கருதப்பட்ட திருநெல்வேலி, பாளையக்கார நாடுகளின் அரசியல் நிலை

'பொது நிறுவனத்தில் மேன்மைதங்கிய அதிகார நீதிபதிகளிடமிருந்து 1795 ஜூன் 10 ஆம் தேதியிட்டு வந்த பொது கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு.’

"55. உங்கள் ஆலோசனைகள், நடவடிக்கைகளில் குறிப்பிட்டிருக்கும் இராமநாதபுரம் அரசர் செரோக்கார் அல்லது சிவகங்கை அமைச்சருக்கு எதிராகக் காட்டிய பகையின் தீங்கான முடிவுகள் முக்கியமாகப் பின்னே குறிப்பிட்டவரின் நிலை எங்களுக்கு மிக்க கவலையை உண்டாக்கியுள்ளது. அடுத்து செப்டம்பர் 29 ஆம் தேதியில் அனுப்பிய கடிதத்தில் பாளையக்கார நாடுகளின் மீது பிரிவுபட்ட அதிகாரம் நீடித்திருக்கும்வரைப் பொது தீமைகளுக்கு எந்தவிதமான வன்மையான கழுவாய் செய்ய இயலாது என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனித்தோம்."

"61. ஆனால் இந்த உடன்படிக்கைக்கு முன்னும் பின்னும் இந்தப் பாளையக்காரர்கள் மீது உண்மையில் நவாப் எத்தகைய அதி காரத்தை எவ்வளவு தூரம் செலுத்தி வந்தான்?"

நிபந்தனைக்குட்பட்ட பேஷ்குஷ் காரணமாக நவாபால் இயன்ற எல்லா முயற்சிகளாலும் ஏழு ஆண்டுகளில் வசூலித்த தொகை, கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அவர்கள் இரண்டு ஆண்டு