பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 276


அமைதி ஏற்படுத்த முடியும் அல்லது எதிர்கால வளத்திற்குத் தேவையான உறுதியான அடித்தளம் கோல இயலும் என்றெல்லாம் எதிர்நோக்குவது நாட்டிலுள்ள எல்லா மக்களின் மீதும் செலுத்தப்படும் பிரிவுபடாத அதிகார ஆட்சி முழுமையும் ஆங்கிலேயர் வசமாகி நவாபு ஒய்வுச் சம்பளம் பெற்று அரசியல் அலுவலிலிருந்து விலகும் வரை நியாயமற்றது என்பது தெளிவாகும்.

கட்டபொம்மன் நாயக்கன்

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் கம்பள இனப்பிரிவைச் சேர்ந்த நாயக்கன். அவனைக் குறிப்பிடும் கட்டபொம்ம நாயக்கன் என்ற பெயர் அவனது சொந்தப் பெயரல்ல. துவக்கத்தில் அது ஒருவனின் சொந்தப் பெயராக இருந்தபோதிலும் அப்பெயர் குடும்பத் தலைவனுக்குப் பட்டப் பெயராகக் கொடுக்கப்பட்டதாகும். கலெக்டராகிய திரு. ஜாக்சன் அவர்கள் தயாரித்த குடிவழிப் பட்டியலில் முதன்மையாக இருந்தவன். 1709 இல் பாளையத்திற்குத் தலைவனானான். இதே பெயரையுடைய நான்கு பேர் அக்காலத்திய குறிப்புகளிலே குறிப்பிடப் பட்டிருப்பதை நான் கண்டேன். 1755 இல் கர்னல் ஹீரான் படையெடுத்துச் சென்றபோது இருந்த கட்டபொம்ம நாயக்கன் முதல்வன். இரண்டாமவன் 1760 இல் தலைவனானான். மூன்றாமவன் 1791 இலும், நான்காமவன் 1799 இலும் தலைவரானார்கள். மூன்றாவது நான்காவது கட்டபொம்மன்கள் தூக்கிலிடப்பட்டனர். பொம்மா என்பது பொதுவான தெலுங்குப் பெயர். தமிழ்நாட்டில் அப்பெயருக்குச் சின்ன பொம்மா, சிறிய பொம்மா அல்லது கட்டை பொம்மா அதாவது குள்ளமான பொம்மா என்ற பண்புச் சொற்களைப் பெயருக்கு முன் சேர்ந்தார்கள். இப்பெயர் ஆங்கிலத்தில் 'கேட்ட பொம்ம நாய்க்' (Cataboma Naig) இதுவே 'கேட்' என்று குறுகியது. ஆங்கில சிப்பாய்கள் சாதாரணமாக அவனை பூனை (Cat) என்றே அழைப்பதுண்டு. கடைசி கட்டபொம்ம நாயக்கன் கருத்தையா சரியாக வீரபாண்டிய கட்டபொம்மன் என்றழைக் கப்பட்டான். அவனுக்கு ஒரு ஊமைத்தம்பி உண்டு. அவன் மிக்க புகழ் பெற்றவன். (கால்டுவெல் கருத்து!) - ந.ச. இணைப்பில் (Annexury) அவனைப் பற்றிய சில குறிப்புகள் கொடுக்கப்படும். அவன் பெயர், ஊமையன் குமார சுவாமி நாயக்கன் என்று போரின் இறுதியில் கர்னல் அக்னியூவிடம் அனுப்பிய கைதிகளின் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊமையனுக்கும் இளைய சகோதரன் மற்றொருவன் இருந்தான். இவன் கடைசி சிறு கலகங்களில் (கால்டுவெல்லுக்குக் கலகம்! நமக்குப் போர்! - ந.ச.) உண்மையான கலகக்காரத் தலைவனாக இருந்தவன். இவர் பெயர் சுப்பநாயக்கன். சாதாரணமாக, சிவத்தையா