பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 278


இருந்தார். அவருடைய தலைமை அலுவலகம் இராமநாதபுரத்தில் இருந்தது. 1798இல் திரு. ஜாக்சன் இராமநாதபுரத்தில் தன் முன் வந்து அவன் செய்கைகளுக்குக் காரணம் கூறுமாறு இட்ட கட்டளையே கட்டபொம்மனுடன் இறுதிப் போராட்டம் ஆரம்பிக்க காரணமாயிருந்தது. மன்னிப்புகளும் காலநீட்டிப்புகளும் மீண்டும் மீண்டும் ஆணைகளைத் திரும்பத் திரும்ப இடுவதற்கு வழிகோலின. 1798 செப்டம்பர் 9 ஆம் தேதி அவன் இராமநாதபுரத்தில் ஆஜரானான். அன்றைய மாலை கலெக்டர் முன்னிலையில் கலெக்டருக்கும் அவனுக்குமிடையே நடந்த கடிதப் போக்குவரத்து விவரங்கள் படிக்கப்பட்டன. அப்போது எச்சரிக்கைபெற்றவன் போன்று நடித்து கலெக்டர் முன்னிலையிலிருந்து பாய்ந்து சென்று அவன் கையாட்களுடன் கோட்டையைவிட்டு வெளியே ஓடிவிட்டான். வாயிலில் தளபதியும் உதவியாளனுமாகிய கிளார்க் (Clark) தலைமையில் இருந்த காவல் படையைத் தாக்கிக் கிளார்க்கை அவன் கையாலேயே குத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. (ஆமாம்! ஆமாம்! அவன் விடுதலைவீரன் - ந.ச.) இவ்வாறு தப்பி ஓடிய போது அரசுக்குரிய கிராமங்களை எல்லாம் சூறையாடிவிட்டுப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குத் திரும்பினான். இதன்பேரில் அரசாங்கம் திரு. ஜாக்சனின் ஆட்சியைக் கண்டித்தது. பாளையக்காரர்களின் நிர்வாகியான ஜாக்சனின் ஆட்சித் திறமையின்மையைக் கண்டித்தது. பாளையக்காரர்கள் நிர்வாகியான ஜாக்சனுக்குப் பின்வந்த மேஜர் ஜெனரல் பிளாயிட் (Major General Floyd) இடமோ அல்லது கலெக்டரிடமோ உடனே அடைக்கலமடையும்படி அறிக்கை வெளியிடப்பட்டது. இக்கட்டளையைப் பாளையக்காரன் பொருட்படுத்தவில்லை. (ஆமாம்! ஆமாம்! அவன் விடுதலைவீரன் - ந.ச.) அடுத்துள்ள நாடுகளில் முக்கியமாக எட்டயபுரம் பாளையக்காரனின் எல்லைப்புறங்களிலுள்ள இடங்களில் தொடர்ந்து முன்போலவே தாக்குதல்கள் நடத்தினான்.

சென்னை கவர்னருக்கு வரிவசூல் குழுவால் எழுதப்பட்ட கடிதங்களிலிருக்கும் கீழ்க்காணும் குறிப்புகள் திரு.ஜாக்சனின் நடவடிக்கையை அரசாங்கம் ஏற்கமறுத்த செய்தியைப் பற்றி மேலும் சில விவரங்களைத் தெளிவுபடுத்தும்.

'201. இந்த மகிழ்ச்சியற்ற நிகழ்ச்சித் தொடர்புடைய சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லும் போது கொடுக்கப்பட்டுள்ள ஜாக்சனின் குறிப்புகளின் தன்மை இந்த இளைஞனை அழிவிலிருந்து காப்பாற்றக் கடைசி முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அவனது அந்தக் கடைசிக் கொடிய செயல், அவனிடத்தில் காட்டப்பட்ட எந்தவிதத் தவறான சலுகையிலிருந்தும் தோன்றியதல்ல என்று காட்டவும், ஜூலை 31 ஆம்