பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

281 கால்டுவெல்


பட வேண்டுமெனப் பரிந்துரை செய்து தங்களது மேலான நலமிக்க ஆலோசனைக்கு மிகப் பணிவுடன் அனுப்பி வைக்கிறோம்.

வரி வருமானத்துறை சென்னை அரசுக்குத் தொடர்ந்து எழுதிய கடிதங்கள்

165. எங்களுடைய கடைசி பொது அறிக்கையில் இராமநாதபுரம் கோட்டையில் நடைபெற்ற தீவினையான அமளியைப் பற்றியும் அதன் விளைவாய் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் தப்பி ஓடியதைப் பற்றியும் கண்டோம். அக்டோபர் 3 ஆம் தேதியில் தாங்கள் எங்களுக்குத் தெரிவித்தபடி கம்பெனி அதிகார இனத்துக்குத் தீங்கு வராமல் காத்துக் கொள்வதற்கான வலிமை பொருந்திய படையைத் தயார் செய்வதற்கு விரைவில் முயற்சி எடுத்துக் கொள்வது சிறப்புடையது என்றும் பாளையக்காரனைக் கீழ்படியக் கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்கள். ஆனால் கட்டபொம்மநாயக்கன் கட்டாயப்படுத்தலின்றித் தானே கீழ்படியத் தூண்டப்படலாமென்பதற்கான செய்திகள் கிடைத்திருப்பதால் அறிக்கை வெளியிடுவதில் கால நீட்டிப்பு ஏற்படக் கூடா தென்றும், அந்த அறிக்கை வெளியிடுவதிலும் அவ்வறிக்கை பாளையக்காரனுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் தாங்கள் விரும்பியதால், அதற்காக அறிக்கையின் படிகள் இரண்டை ஜாக்சனுக்கு உடனே அனுப்பியுள்ளோம்.

166. பிறகு நாங்கள் பாளையக்காரரின் கீழ்படிவு பற்றி மேலும் நம்பிக்கை வைத்திருப்பதாக உணர்த்தியுள்ளீர்கள். ஆனால் ஜாக்சனிடம் அவனுக்கு முழு நம்பிக்கை இல்லை என்று தெளிவாகியவுடன் தாங்கள் கலெக்டரின் அதிகாரத்தைத் தள்ளிவிட்டு மேஜர் ஜெனரல் 'பிளாயிடு' (Floyd) உடனே அவனுடன் உடன்படிக்கைப் பேச்சு (ஒ:-ந.ச.) தொடங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டீர்கள். அதிகாரிகளுக்குள் எதிர்ப்பு ஏற்படா வண்ணம் இத்தீர்மானத்தை தாமதமின்றி கலெக்டருக்குத் தெரிவிக்கும் படியும் தாங்கள் விரும்பினர்கள். அன்றே அவ்வாறு செய்யப்பட்டது.

167. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் அவ்வாறு செயல் பட்டிருக்க இயலாத எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்த போது இராமநாதபுரத்தில் நடைபெற்ற விரும்பத் தகாத கடந்த நிகழ்ச்சியைத் தோற்றுவித்து, அதை வளர்த்து விட்ட சூழ்நிலைகளைப் பற்றி முழுவிசாரணை நிறுவதற்குத் தாங்கள் தீர்ப்பளித்தது உசிதமென்று நாங்கள் அறிவிக்கப்பட்டோம். இக் காரணத்திற்காக கர்னல் பிரெளன் (Brown), லெப்டினன்ட் கர்னல் ஓர்ம் (Oram), திரு. ஜான் காசாமேயர் (John Casamayer) இவர்கள் அடங்கிய ஒரு குழுவை நிறுவுவதில் நிறைவு