பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

283 கால்டுவெல்


(பேயும் இரங்குகிறது! - ந.ச.) அவன் கடந்து சென்ற பாளையங்களின் சிறிய பாளையக்காரர்களுக்கு முன் அவன் மிக்க இழிவான மானக்கேடு அடையும் படியாயிற்று. வரிவருமானத் துறையினர் ஜாக்சன் அவ்வாறு செய்வதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை. (அடே....! - ந.ச.)

168.இராமநாதபுரத்திற்குப் பாளையக்காரன் வந்தபிறகு கலெக்டரின் அலுவலகத்தில் கலெக்டர் அவனை நடத்திய விதத்தால் அவன் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறான இன்னல்களுக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அத்தகைய நடத்தை பாளையக்காரனது நெஞ்சில் அச்சத்தை ஊட்டி அவனது தற்காப்புக்கான எச்சரிக்கையை உண்டாக்கியது. எனவே, அவன் தப்ப முயற்சித்தது இயற்கையான முடிவாகும். வாயிலில் ஏற்பட்ட கலகம், காவலாளிகளை அடக்கி, அரசாங்க அதிகாரிகளை எதிர்க்க வேண்டுமென்ற வரம்பற்ற செயல்கள் பாளையக்காரனால் முன்னேற்பாடுகளுடன் திட்டமிடப்பட்டதல்ல. (அநீதியும் நீதி பேசுகிறது! - ந.ச.)

வருமானத்துறை சென்னை அரசுக்கு எழுதிய கடிதங்கள்

170. குழுவின் முன் கொண்டுவரப்பட்ட எல்லா சாட்சிகளிலிருந்தும் லெப்டினன்ட் கிளார்க் பாளையக்காரர் கையால் கொலை செய்யப்பட்டார் என்ற ஐயம் உள்ளது. ஆனால் துப்பு துலக்குதற்காக எல்லா வழிகளும், உள்ளுரிலிருந்து செய்தி அறியும் வாய்ப்புகளுமுடைய அக்குழு கிளார்க்கைப் பாளையக்காரன் தானே கொலை செய்யவில்லை; அவன் படையிலுள்ள ஒரு வேல்வீரன் கொலை செய்தான் என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்ததால், கிளார்க்கின் கொலை தொடர்பாகக் கட்டபொம்ம நாயக்கன் விடுதலை செய்யப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. எனினும், தன் படைவீரனின் செய்கைக்குப் பாளையக்காரனே பொறுப்பாளியாக வேண்டும் எனவும் அன்றியும் கலெக்டரின் ஆணைப்படி தளபதி கிளார்க்கு தன் கடமையைச் செய்து கொண்டிருந்த போது (அப்படியானால்? குத்தியவனும் அவன் கடமையைத் தானே செய்தான். - ந.ச.) கொலை செய்யப்பட்டதால், இறந்த கிளார்க்கின் மனைவி மக்களின் குடும்பத்தைக் காத்து உதவி செய்யத் தக்கவாறு கிளார்க்கின் ஊதியம், பஞ்சப்படி இவற்றிற்கு ஈடான தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாட்டைப் பாளையக்காரனே செய்ய வேண்டு மெனவும் தீர்ப்பாயிற்று. (வெள்ளையன் உயிர் வேறு; கறுப்பன் உயிர் வேறு!? - ந.ச.)

171. இந்தத் தீர்மானங்கள் லூஷிங்டனுக்கு அறிவிக்கப்பட்ட போது பாளையக்காரன் கிளார்க்கைக் கொலை செய்த குற்றத்தினின்றும்