பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

287 கால்டுவெல்


மகன் அல்லன். ஆனால் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன். மாப்பிள்ளை வன்னியன் என்று அழைக்கப்பட்டான். அவனுக்கு உள் நாட்டு ஆதரவு அதிகமாக இருக்கிறதென்றும், புகழ்வாய்ந்த துணிகரமான தலைவன் என்றும் வருணிக்கப்பட்டான். (திருநெல்வேலியில் வன்னியன் இனத்தைச் சார்ந்த சமீன்தார் குடும்பம் சிவகிரி குடும்பம் ஒன்று தான் என்று எண்ணுகிறேன் - ந.ச.) மேலும் கட்டபொம்ம நாயக்கனுக்குச் சிவகங்கைத் தலைவராகிய மருதுவின் இரக்கமும் உதவியும் துணைபுரிந்தன. இப்போராட்டத்தில் அரசாங்கத்திற்கு மிக்க துணை வலிமையுடையவனாயிருந்த தலைவன், எட்டயபுரப் பாளையக்காரன். ஊத்துமலை, சொக்கம்பட்டி, மேற்கிலுள்ள தலைவன் கோட்டை, கிழக்கே மணியாச்சி மேல்மாந்தை பாளையக்காரர்கள் அரசின் சார்பிலிருந்தனர். உண்மையில் உதவி என்ற பெயரில் அரசாங்கத்தார் பெற்றது எட்டயபுரம் பாளையக்காரர்களிடமிருந்துதான் (அடி சக்கை! - ந.ச.)

அப்போது கலெக்டராயிருந்த லூஷிங்டனிடம் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருந்தது. நாளடைவில் அவனே கவர்னரானான். ஆகவே, திருநெல்வேலியிலுள்ள பாளையக்காரர்களின் அதிகாரத்தையும் பரவத் தொடங்கிய கலக மனப்பான்மையையும் வேருடன் களைய வேண்டிய தேவையை அக்காலத்திலிருந்த அரசாங்கம் நம்பும்படி செய்வது லூஷிங்டனுக்கு எளிதாயிற்று. எனினும், சீரங்கப்பட்டணம் கைப்பற்றப்படும் வரை காத்திருந்தனர். (திப்பு வாழ்க! - ந.ச.) இந்த நிகழ்ச்சிக்குச் சிறிது காலத்திற்குப் பின்னே அவர்களுடைய கவலைகள் தீர்ந்து படைகள் தாராளமாய் நகரத் தொடங்கியதும், அவர்கள் ஏற்கனவே எண்ணித் திட்டமிட்டிருந்த கருத்துக்களைச் செயல்படுத்தத் தக்க காலம் வாய்த்தது என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

மேஜர் பானர்மனின் படையெடுப்பு

திருநெல்வேலியில் அடக்கு முறையை நிலைநாட்ட ஒரு படை தயாரிக்கப்பட்டது.மிகத்திறமைவாய்ந்த மேஜர் பானர்மனின் தலைமையில் அப்படை அனுப்பப்பட்டது. பானர்மனுடைய அறிக்கைகள், நினைவுக் குறிப்புகள் முதலியவை அங்குநடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றிய முழுவிவரங்களும் அடங்கியவையாயிருந்தன. எனவே, திரு. கீரன்சு (Kearns), இக்குறிப்புகளைப் பாதுகாத்துத் தொகுத்து வெளியிட்டார். மேஜர் பானர்மனுடைய கட்டளைகள் 1799, ஆகஸ்டு 19 அக்டோபர் 21 என்று தேதியிடப்பட்டுள்ளன.இந்த இரண்டுமாதக் குறுகியகாலத்திற்குள் அவனுக்குக் கொடுக்கப்பட்ட செயலைத் திறம்படச் செய்வதில் அவன் வெற்றி கண்டான்.

மேஜர் பானர்மனுடைய படையெடுப்புத் தொடர்பான மிகச் சிறப்