பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

289 கால்டுவெல்


இந்தத் தேவையைப் பற்றிய லூஷிங்டனின் சிந்தனைகளும் பொதுநலத் தொண்டுகளில் அவருக்குள்ள ஆர்வமும் மேஜர் பானர்மனுக்கு அளிக்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களுக்கு ஏற்ற மிகத் தேவையான உதவியைச் செய்து கொடுக்கத் தூண்டுமென்பதில் எங்கட்கு ஐயமில்லை.

அப்போதைய சென்னை ஆளுநராயிருந்த லார்டு கிளைவ் - புகழ் பெற்ற லார்டு கிளைவின் மகன் - இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

கலெக்டரின் அறிக்கை

பாளையக்காரர்கள், நில உடைமையாளர்கள், பொதுவாக திருநெல்வேலி பாளையங்கள் என்று அழைக்கப்படும் நாடுகளிலுள்ள பொது மக்கள் ஆகிய யாவருக்கும் அறிவிப்பது:

காலஞ்சென்ற திப்புசுல்தானுக்கு எதிராக நடைபெற்ற கலகங்களில் திருநெல்வேலி பாளையக்காரர் பலருக்குப் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். வரிசெலுத்தத் தாமதித்தாலும், வேறு எந்த வகையில் கீழ்படியாமலிருந்தாலும் அவர்கள் வலுவில் அரசாங்கத்தின் கடும் வெறுப்புக்கு ஆளாவார்கள். எனினும் அத்தகைய எச்சரிக்கைகளை அறியாது முந்தய போர்களில் எதிரிகளாயிருந்த பல பாளையக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஒரு பொருட்டாக எண்ணாமல், அவர்களுள் சிலர் தொடர்ந்து கீழ்படியாமல் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். (ஒ! ஓ! - ந.ச.) கொள்ளையடித்தும், நாட்டின் அமைதியைக் கெடுத்தும், அமைதியாக வாழும் மக்களை வேண்டுமென்று கொலை செய்தும் கம்பெனி ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். (பிரிட்டிஷ் பேரரசு நாட்டை ஆண்டது வேறு எப்படியோ? - ந.ச.) இப்பொழுது இந்த எச்சரிக்கைகளும் அவர்களுடைய புறக்கணிப்பும் மேன்மை தங்கிய ஆளுநர் தலைவருக்கு (கவர்னர் ஜெனரலுக்கு) அறிவிக்கப்பட்டுள்ளன. மேன்மை தங்கிய அவர், கம்பெனி அரசாங்கத்தின் ஆணையோ அல்லது அவர்களுடைய சொந்த அரச பக்தியோ, தற்காலிகமாகப் படையில்லாதபோதும் பாளையக்காரர்கள் மீண்டும் அடங்காத்தன்மை பொருந்திய வழக்கங்களில் ஈடுபடுவதில் அவர்களைத் தடுக்கவில்லை என்பதை அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார்.

ஆளுநர் தலைவர் (கவர்னர் ஜெனரல்) கட்டபொம்ம நாயக்கன் விசாரணையில் நாம் காட்டிய தயவு, நீதி, சகிப்புத் தன்மை இவை பொதுவாகப் பாளையக்காரர்களை சிறப்பாய் (?!) கட்டபொம்மனை பிரிட்டிஷ் அதிகார இனத்திடம் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துக் கொள்ளத்