பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 290


தூண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டுள்ளார். ஆனால் படைபலமின்றி கலெக்டரைச் சந்திக்க மறுத்தது, வரி பாக்கியைச் செலுத்தக் காலம் தாழ்த்துவது, மற்ற எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு சிவகிரி பாளையக்காரருடன் போர்புரிந்தது ஆகியவை அவனுடனோ பாளையக்காரர்களுடனோ இனி அமைதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எங்கள் நம்பிக்கையை அறவே ஒழித்துவிட்டது. (அது சரி! - ந.ச.) எனவே, அவர் தெற்கு மாகாணங்களில் கம்பெனி அதிகாரத்தின் பலத்தைக் காக்கவும் அவர்களுக்கு எதிராகப் பலவந்தமாய்க் கலகம் செய்பவரை அடக்கவும் போதுமான வீரர்களடங்கிய படை ஒன்றைத் தயாரித்து வைப்பது நல்லதெனத் தீர்மானித்தார். அப்படையின் பொறுப்பு மேஜர் ஜான் பானர்மனுக்கு அளிக்கப்பட்டது. அவனுடைய அதிகாரத்தைப் பலப்படுத்த இராணுவ அதிகாரத்தையும் அவனுக்கு அளிக்க மேன்மை தங்கிய ஆளுநர் தலைவர் (கவர்னர் ஜெனரல்) எண்ணியுள்ளார்.

‘கொலைத் தண்டனை அளிக்கும் அதிகாரத்தைக் கண்டிப்பாகப் பயன்படுத்தப் போவதால் எல்லோரும் அடங்காமை, கலகம் ஆகிய செயல்களில் ஈடுபடாதிருக்குமாறு விதிப்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.’

‘இவ்வறிக்கை வெளியானதற்குப் பிறகு கம்பெனி அதிகாரத்திற்கு எதிராக எவ்வழியில் எச்செயலைச் செய்தாலும் அவரவர்கள் பாளையங்களைச் சேர்ந்த மக்களின் நன்நடத்தைக்கு அந்தந்த பாளையக்காரரே பொறுப்பாளியாவார்கள்’ என்று இதனால் அறிவிக்கப்படுகிறது.

‘திருநெல்வேலி பாளையங்களிலுள்ள எல்லாப் பாளையக்காரர்களுக்கும், நிலச் சொந்தக்காரர்களுக்கும், பொது மக்களுக்கும் மேலும் தெரிவிப்பதாவது: மேஜர் பானர்மன் தேவை என்று தீர்மானிக்கும் எந்த எண்ணத்தையும் தெரிவிக்கவும், அதைச் செயல்படுத்துவதற்காகக் கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. (அம்மாடி! - ந.ச.) அந்தக் கட்டளைகளுக்குத் தாமதமின்றி பணிதல் வேண்டும். ஏற்கனவே கலகக்காரர்கள் என்று கண்டுபிடிக்கப் பட்ட பாளையக்காரர்களையும், இனி கலகங்களில் ஈடுபடுவார்களென எதிர்பார்க்கப்படுகின்ற பாளையக்காரர்களையும் பற்றி கலகக்காரர்கள் கீழ்படிந்து ஒழுங்காயிருக்கின்றனர்’ என்று பானர்மன் கலெக்டருக்குத் தெரிவிக்கும் வரை, கலெக்டர் அத்தகையோருடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள மறுத்து விடுவார்.

மேஜர் பானர்மன் செப்டம்பர் 5 ஆம் தேதி பாஞ்சலாங்குறிச்சியை அடைந்தான். அவனுடைய படையைச் சேர்ந்த ஐரோப்பியப் படைப் பகுதி வருவதற்குக் காத்திராது அன்றே பெருந்தாக்குதல் நடத்திக்