பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 296


பிள்ளையும், அவனுடைய உடன் பிறந்தாருமாவார்கள். இந்த இரண்டு பேர்களைப் பிடித்ததில் சிறப்பாக சுப்பிரமணியப் பிள்ளையைப் பிடித்தது - என் எதிர்காலத் திட்டங்களின் வெற்றி, அதனால் ஏற்படும் ஆட்சி மாற்றம், அதன் பயனாய் நாட்டில் நிலவப்போகும் அமைதி இவற்றிற்கு முக்கிய வழிகோலிற்று என நான் உணர்ந்தேன். கட்டபொம்ம நாயக்கனையே நான் கைது செய்திருப்பினும் இத்தகைய பயன் கிட்டியிராது. ஏனெனில் அவர்கள் திறமை மிக்கவர்கள், சதித் திட்டங்களுக்கு வழி வகுப்பவர்கள். சுப்பிரமணியப் பிள்ளைக்கு ஏராளமான சொத்து உண்டு. எனவே அரசாங்கத்தின் அதிகாரத்தை எதிர்க்க அப்பணத்தைச் செலவிடத் தயாராயிருப்பாரென்று எண்ணக் காரணமிருக்கிறது. கட்டபொம்மன் ஈடுபடுகின்ற ஒவ்வொரு பொது நிகழ்ச்சியையும் முழுமையாக நடத்தும் அளவுக்கு கட்டபொம்மனிடம் அவனுக்கு செல்வாக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. கட்டபொம்மன் அவனுடைய உடன்படிக்கைக்கு மாறாகக் கம்பெனி அதிகாரத்தை எதிர்ப்பதும் சுதந்திர அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் இந்த சுப்பிரமணியப் பிள்ளையின் அறிவரையின் விளைவுகளால்தான். (அடேயப்பா இவ்வாறு உண்மையை எழுதியதற்காகவேனும் பகையாளி பானர்மென் வாழ்க! பகைவனும் அஞ்சும் பண்பு படைத்த தானாபதித் தமிழன் புகழ் வாழ்க! ந.ச.)

இந்தச் சமயத்தில் சுப்பிரமணியப்பிள்ளை கைதியாக என் கூடாரத்திற்குக் கொண்டுவரப்பட்டான். கட்டபொம்மனைப் பிடித்துத் தந்த எட்டயபுர ஆட்கள் என்னைக் காண வந்த போது அவர்களுக்கு நல்ல பரிசுகள் கொடுக்கும்படியும், சுப்பிரமணியப் பிள்ளையை நாகலாபுரத்து கிராமத்தின் ஒரு மிக வெளிப்படையான பொதுத் திடலில் தூக்கிலிட்டு, அவன் தலையைப் பாஞ்சாலங்குறிச்சிக்கு எடுத்துச் சென்று அங்கு ஈட்டி முனையில் குத்தி, நட்டுவைக்கும்படியும் கட்டளையிட்டேன். (என்ன கொடுமை! - ந.ச.) அவனுடைய உடன்பிறந்தாரும் மற்ற கைதிகளும் சூழ்நிலைக்கேற்றவாறு ஒழிக்கப்படுவதற்காகச் சிறையிலிடப்பட்டனர். இந்தச் செயலினால் இதுவரை கலகங்களுக்கும் கொடுமைகளுக்கும் தலைவனாய் இருந்து அரசாங்கத்திற்கு எதிராகத் துண்டி விட்டுக் கொண்டிருந்த ஒருவனின் முடிவு எவ்வளவு கடுமையும் துன்பமுமானதும் ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்தத் தீர்மானித்தேன். இச்செயல்கள் அரசுக்கு என்மேல் தவறான எண்ணத்தைத் துண்டியுள்ளது. எனக்குக் கொடுக்கப்பட்ட தேவையான அதிகாரத்தின் எல்லையிலிருந்து நான் மீறவில்லை என்றும் அதைச் செயலாற்றுவதிலும் நான் வரம்பு மீறவில்லை என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளிலுள்ள எச்சரிக்கை, நிதானம் இவற்றை நான் மறந்துவிடவில்லை என்றும், அவைகளே என்னுடைய நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும்