பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 298


மக்களை அழிக்கக் கூடிய செயல்கள் திரும்பவும் நடைபெறாதிருக்க மாவட்டத் தலைவர் (கலெக்டர்) மூலமாக அந்த ஆட்களின் தலைவர்கட்குக் கம்பெனியின் கட்டளைகளை அனுப்பி, இனி கம்பெனி கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி செய்யத்தக்க மற்ற நடவடிக்கைகள் எடுக்க எண்ணினேன். அரசாங்கம், குற்றம் சாட்டும் கொடும் செயல்களில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் கட்டபொம்ம நாயக்கனின் தலைமை நிர்வாகியான சுப்பிரமணியப் பிள்ளையும் நாகலாபுர பாளையக்காரனின் உடன் பிறந்தானான செளந்தர பாண்டியனும்தான் என்பது என்னுடைய விசாரணையின் போது தெரிந்த முடிவுகள் என்பதையும் வழக்கறிஞர்களுக்குக் கூறினேன். (மிக நன்று! - ந.ச.) எனவே, அவர்கள் தூக்குத் தண்டனை அடைய வேண்டும் என்று நான் இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் என்பதையும் கூறினேன். சுப்பிரமணியப் பிள்ளையை நாகலாபுரம் கிராமத்தருகிலுள்ள திடலில் தூக்கிலிட்டு அவன் தலையை ஈட்டியில் குத்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பவும், செளந்திரபாண்டியனை இராமநாதபுரத்திலுள்ள பள்ளிமடை தாலுக்காவிலுள்ள கோபாலபுரம் கிராமத்தில் தூக்கிலிடவும் கட்டளையிட்டேன். (வீரம் பெற்ற பரிசு! - ந.ச.) அவன் தலைமை வகித்த படை ஒன்று ஈவு இரக்கமின்றி இந்தக் கிராம மக்களைத்தான் கொன்று அழித்தது. இந்த இரண்டு மனிதர்களையும் அவர்களுக்கிடப்பட்ட தண்டனையை நிறைவேற்ற அழைத்துச் சென்றபின் என்னுடைய கட்டளையின் நகல்களைப் பல வழக்கறிஞர்களுக்கும் வழங்கினேன். இக்கட்டளைகளை அவரவர் தலைவர்களுக்கு அனுப்புமாறு தெரிவித்தேன். அன்று காலையில் அக்கூட்டத்தில் நடைபெற்றவற்றைப் பற்றிய உண்மையான குறிப்புகளையும் அவர்களைத் தயாரிக்கும்படி கட்டளையிட்டேன். (எவ்வளவு இரக்கம் - ந.ச.) ஆனால் அதற்கு மாறாக கம்பெனி அரசு பழைய கலகக்காரப் பாளையக்காரர்களிடம் தாராளமாகவும் இரக்கமாகவும் நடந்து கொண்டதால் நாட்டில் எதிர்பார்க்கும் ஒழுங்கை நிலைநாட்ட இயலாததால்தான் இச்சூழ்நிலையில் இக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்பதையும் மக்களுக்கு உணர்த்த வேண்டுமெனக் கூறினேன். (ஏகாதிபத்தியம் கூட மக்களைக் கவர்வதில் ஒரு கண்ணாய் இருந்துள்ளதே!-ந.ச.) வழக்கறிஞர்களும் கலைந்தனர். இந்தச்சந்திப்பில் நடந்தவைகளைக் கொண்டு அவர்கள் மனதில் நல்ல ஒழுங்கான எண்ணங்கள் பதிந்திருக்குமென்று நம்பக் காரணங்கள் உள்ளன.

எனக்கு வாஷிங்டனிடமிருந்து வந்த கடிதத்தில் தொண்டமான் கட்டபொம்ம நாயக்கனைத் தேடிப் பிடிப்பதில் வெற்றி கண்டு விட்டதாகவும், கலகக்கார அப்பாளையக்காரனை என்ன செய்யவேண்டுமென